என்னோட கவனம் வேகத்துல கிடையாது.. நான் உழைக்கிறது இந்த விஷயத்துக்காகத்தான் – மயங்க் யாதவ் பேட்டி

0
14
Mayank

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் எதிர்கால வீரராக, லக்னோ அணிக்காக தற்பொழுது விளையாடு வரும் 21 வயதான டெல்லியைச் சேர்ந்த வலதுகை வேகம் மயங்க் யாதவ் உருவாகி இருக்கிறார். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 156.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அதிகபட்ச வேகப்பந்தை பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாக 150 கிலோமீட்டர் தாண்டி பந்து வீசும் பொழுது குறிப்பிட்ட அந்த பந்துவீச்சாளர் தன்னுடைய கட்டுப்பாட்டை வேகத்தின் காரணமாக இழப்பார். இதனால் அவரால் துல்லியமாக தான் நினைத்த இடத்தில் பந்தை வீச முடியாது. விக்கெட் வருகின்ற வாய்ப்புகள் இருப்பது போலவே ரன்கள் கசியும் வாய்ப்பும் அதிவேகத்தில் எப்பொழுதும் உண்டு.

- Advertisement -

இப்படியான நிலையில் தான் மயங்க் யாதவ் மற்ற எல்லோரையும் விட விதிவிலக்காக இருக்கிறார். அவர் வேகமாக வீசுவதோடு மட்டுமில்லாமல் கட்டுப்பாடாகவும் துல்லியமாகவும் வீசுகிறார். இவ்வளவு வேகத்தில் பந்து வீசக்கூடியவர்களிடம் இல்லாத கட்டுப்பாடும் துல்லியமும் இவருக்கு இருப்பது தான் இவருடைய தனிச்சிறப்பு. இதன் காரணமாக நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இவரிடம் பெறலாம் என்கின்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து பேசி இருக்கும் மயங்க் யாதவ் “டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு குறித்து எனக்கு எந்த தனிப்பட்ட கருத்துக்களுமே இல்லை. இதுகுறித்து மக்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய செயல்பாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால்நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி இந்த ஐபிஎல் சீசன் பற்றி மட்டுமே நினைக்கிறேன்.

வேகமாக பந்து வீசுவது என்னுடைய இயற்கையான திறன். சிறுவயதிலிருந்தே என்னால் வேகமாக பந்து வீச முடிந்தது. அதை என்னால் தொடர்ந்து வளர்க்கவும் முடிந்தது. என்னை சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நான் எங்கு எதில் மேம்பட வேண்டும் என்பதை எனக்கு தெளிவாக அறிவுறுத்துகிறார்கள். எனது இந்த பயணத்தில் குறைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்டு என்னை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: அடிச்சு சொல்றேன்.. தோனி இன்னிக்கு அந்த தப்ப பண்ணவே மாட்டாரு – சேன் வாட்சன் பேச்சு

மேலும் வேகமாக பந்து வீச தான் வேண்டும் என்கின்ற அவசரம் எனக்கு கிடையாது. நான் லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசுவதில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். நான் எப்பொழுதும் ஸ்பீட் கன்னில் பந்து எவ்வளவு வேகத்தில் வீசி இருக்கிறேன் என்று பார்த்தது கிடையாது. சரியான இடங்களில் வீசி பேட்ஸ்மேன்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது, குழுவாக அமர்ந்து உருவாக்கும் திட்டங்களை களத்தில் செயல்படுத்துவதில் தான் என்னுடைய கவனம் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.