“காயத்தில் மேக்ஸ்வெல் விளையாடாமல் வெளியேற விரும்பினாரா? என்ன நடந்தது?” – கேப்டன் கம்மின்ஸ் பதில்!

0
10049
Cummins

இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியை இந்த போட்டியில் வெல்ல வைத்து மேக்ஸ்வெல் அரை இறுதிக்கு கூட்டி சென்று இருக்கிறார் என்றும் சொல்லலாம்!

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் எடுத்த நிலையில், பந்துவீச்சுக்கு திரும்ப வந்து ஆஸ்திரேலியாவின் முதல் ஏழு விக்கெட்டுக்களை 91 ரன்களுக்கு வீழ்த்தி, 200 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் மேக்ஸ்வெல் அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

- Advertisement -

இன்று ஆரம்பத்தில் பொறுமையாக ஆரம்பித்த மேக்ஸ்வெல் ஒரு கேட்ச் வாய்ப்பையும் ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்தார். ஆனால் அதை ஆப்கானிஸ்தானின் முஜீப் கைவிட்டார். அதற்கு மேல் மேக்ஸ்வெல் எந்த இடத்திலும் தனது அதிரடியை நிறுத்தவே கிடையாது. இறுதியாக அதே முஜீப் பந்தில் சிக்சர் அடித்து அணியை வெல்ல வைத்தார்.

மேலும் இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடிக் கொண்டிருந்த பொழுது சதம் தாண்டி அவருக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை ஆஸ்திரேலிய மருத்துவக் குழு மைதானத்திற்குள் வர வேண்டிய சூழல் உண்டானது. மேக்ஸ்வெல் மிகுந்த சிரமப்பட்டார்.

இந்த நிலையில் அடுத்த விளையாட வேண்டிய ஆடம் ஜாம்பா ஓய்வு அறையில் இருந்து இரண்டு முறை கீழே வந்து மீண்டும் திரும்பி சென்றார். மேக்ஸ்வெல் சிறிது ஓய்வு எடுத்து எடுத்து மீண்டும் விளையாடவே ஆரம்பித்தார். மேலும் 128 பந்துகளில் 21 ரன்கள் குவித்து அணியை வெல்லவும் வைத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறும்பொழுது “இதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. இது மாபெரும் வெற்றி. இதுவரை நடந்த விஷயங்களில் இதுவே மிகப்பெரிய விஷயமாக இருக்க வேண்டும். ஒருநாள் மக்கள் இந்த போட்டியை நானும் பார்த்தேன் என்று ஆச்சரியமாகச் சொல்வார்கள்.

மேக்ஸ்வெல் எப்பொழுதும் சிறந்தவர், எப்பொழுதும் அமைதியாக இருக்கக் கூடியவர். இதன் காரணமாகத்தான் 200 ரன்கள் 7 விக்கெட் இழந்து பின்தங்கி இருந்த பொழுதும் கூட, போட்டிக்குள் வந்து எங்களால் ஆட்டத்தை வெல்ல முடிந்தது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மேக்ஸ்வெல் இடையில் காயம்பட்டபொழுது வெளியேற விரும்பினார் என்றால் இல்லை. அவர் தொடர்ந்து களத்தில் நின்று விளையாட விரும்பினார். அவருக்கு பின்னால் இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள்.

எந்த நிலையில் இருந்தும் வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கைதான் மிகவும் முக்கியமானது. அணியில் அந்த நம்பிக்கை இருந்தது இப்பொழுது நாங்கள் அரை இறுதியில் இருக்கிறோம்.

எங்களால் இந்த போட்டியில் வேறு என்ன சிறப்பாக செய்திருக்க முடியும் என்றால், இந்த இடத்தில் இந்த நேரத்தில் நான் நிறுத்தி வைத்திருப்பேன். ஏனென்றால் இங்கு டாஸ் மிக முக்கியமானது. மேலும் முதல் 20 ஓவர்கள் முக்கியமானது. நாங்கள் சிறப்பாக செய்திருக்க கூடிய விஷயங்கள் இருக்கவே செய்கின்றன!” என்று கூறி இருக்கிறார்!