அப்ப மேக்ஸ்வெல் இப்ப மார்ஸ்.. 177ரன்.. 44ஓவர்.. பங்களாதேஷை பந்தாடிய ஆஸி.. சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்ற அணிகள் எது?

0
1368
Marsh

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புனே மைதானத்தில் பகல் போட்டியில் ஆஸ்திரேலியா பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அந்த அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் இருவரும் இடம் பெறவில்லை. ஸ்மித் மற்றும் சீன் அப்பாட் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் தரப்பில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் நசும் அகமத் இடம் பெற்றார். பங்களாதேஷ் அணிக்கு இந்த முறை 10 ஓவர்களில் விக்கெட் ஏதும் விழாமல் நல்ல துவக்கம் கிடைத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் 36, லிட்டன் தாஸ் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து வந்த நஜிபுல் சாந்தோ 45, தவ்ஹீத் ஹ்ரிடாய் 74, மகமதுல்லா 32, ரஹீம் 21, மெகதி ஹசன் மிராஸ் 29 ரன்கள் எடுக்க 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 306 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சீன் அப்பாட் மற்றும் ஆடம் ஜாம்பா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த மிட்சல் மார்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் சேர்ந்து விக்கெட் ஏதும் விழாமல் பார்த்துக் கொண்டு 44.4 ஓவர்களில் இலக்கை ஏற்றி ஆஸ்திரேலியா அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய மிட்சல் மார்ஸ் 87 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்ததோடு, தொடர்ந்து நின்று விளையாடி 132 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 177 ரன்கள் குவித்தார். ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 64 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

தற்பொழுது பங்களாதேஷ் அணி ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. பங்களாதேஷ் அணியின் ரன் ரேட் -1.087. இன்னும் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் நெதர்லாந்தும் 4 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. நெதர்லாந்து அணியின் ரன் ரேட் -1.635.

எனவே நாளைய போட்டியில் இந்திய அணியை வென்றாலோ, மழையால் ஆட்டம் டிரா ஆனாலோதான் நெதர்லாந்து அணி 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியும். இப்போதைய நிலையில் பங்களாதேஷ் சாம்பியன்ஸ் டிராபிக்கு உறுதியான இடத்தில் இருக்கிறது.

நெதர்லாந்து அணி தற்போது புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கு ஒரு போட்டி இருக்கிறது. அதே சமயத்தில் எல்லா போட்டிகளையும் விளையாடி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை இழந்துவிட்டது. புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் வரும் அணிகளுக்குத்தான் சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது!