“மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஆஸ்திரேலியா அணியில் இருக்க தகுதி இல்ல!” – ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு!

0
2800
Ponting

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணி சிக்கிய பிறகு பெரிய சரிவை சந்தித்தது.

இந்த நேரத்தில் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டனாக ஆரோன் பின்ச் மற்றும் சிவப்பு பந்து கேப்டனாக டிம் பெயின் ஆகியோர் கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நிமிர ஆரம்பித்த ஆஸ்திரேலியா 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2023 ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என வென்று, மீண்டும் தனது உச்சநிலையை எட்டி இருக்கிறது.

குறிப்பாக பேட் கம்மின்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா கிரிக்கெட் கலாச்சாரத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இப்பொழுது யாரையும் ஸ்லேட்ஜிங் செய்வது கிடையாது. அவர்கள் தங்கள் திட்டம் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் உள்நாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த அணியில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் இடம் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தது. அவருடைய ஆப் ஸ்பின் பந்துவீச்சு முன்பு இருந்ததை விட தற்பொழுது நன்றாக மாறி இருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா லெஜன்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நீங்கள் ஒரு டிரக் லோடு அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் குவித்தால் மட்டுமே, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும். மேக்ஸ்வெல் இதற்கு தகுதியானவர் கிடையாது. ஆனால் அவர் திரும்பி சென்று உள்நாட்டில் முதல் தர போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்தால், ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு தாராளமாக வர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது “தற்போது அணியின் சூழ்நிலையை நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்கள். உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தற்போது அணியில் நிறைய இடம் கிடையாது. ஆனால் ஆசியாவில் விளையாடும் பொழுது, அந்த அணியில் இடம் பெறுவதற்கான ஒரு வீரராக எனக்கு சாத்தியமான வாய்ப்புகள் உண்டு. எனவே நான் அதற்கு தொடர்ந்து முயற்சி செய்வேன். ஒரு கட்டத்தில் நான் வாய்ப்பை பெறுவேன்!” என்று கூறியிருக்கிறார்!