“மேக்ஸிக்கு ஈஸியானத செய்ய பிடிக்காது.. இந்த பையன் என்கிட்ட இருந்தா..!” – நெக்ரா வியப்பான பேச்சு!

0
681
Nehra

நேற்று இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் மீண்டும் ஒருமுறை விஸ்வரூபம் எடுத்தார்.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இளம் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணி 222 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தார். அவர் 57 பந்தில் ஆட்டம் இழக்காமல் 123 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஐந்து விக்கெட்டுகள் பெரிய பங்களிப்பை தராமல் வெளியேறியது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றி மிக எளிமையாக இருந்தது.

இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடனும் சேர்ந்து தேவையான நேரத்தில் மேக்ஸ்வெல் ரன்கள் கொண்டு வந்தார். இந்த நிலையில் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 78 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ஒட்டுமொத்தமாக நின்று இந்திய அணையின் வெற்றிக் கனவை சிதைத்து விட்டார். அதிரடியாக 48 பந்தில் 14 ரன்கள் குவித்தார். அவரை ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேக்ஸ்வெல் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆசிஷ் நெக்ரா கூறும்பொழுது “அவர் பேட்டிங் செய்யக்கூடிய விதத்தில் இப்படியான வேலையை எப்பொழுதும் செய்யக் கூடியவர் போலவே இருக்கிறார். இலக்கைத் துரத்தும் பொழுது எப்பொழுதும் அவர் தன்னை மிகவும் நம்பக் கூடியவர். இப்படி அவர் விளையாடியதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

நான் மேக்ஸ்வெல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், அவருக்கு எப்பொழுதும் எளிதான காரியங்களை செய்ய பிடிக்காது. அவர் எப்பொழுதும் கடினமான காரியங்களை செய்வதற்கு விரும்புகிறார். அவர் இப்படியான வேலைகளை மீண்டும் மீண்டும் செய்துள்ளார்.

மேக்ஸ்வெல் உலகக்கோப்பையை வென்று இருக்கிறார். அவர் இந்தத் தொடரில் விளையாடாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி இருப்பார். தற்பொழுது விளையாடி சதம் அடித்திருக்கின்ற காரணத்தினால் மிகவும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்.

மேக்ஸ்வெல் இப்படி செய்வது முதல் முறை கிடையாது. ஆனால் முன்பு அவர் அடிப்பதும் தவற விடுவதும் நிறைய நடக்கும். ஆனால் இப்பொழுது கன்சிடென்சி அதிகமாகி இருக்கிறது.

இவரைப்போல ஒரு வீரர் இருந்தால் அவரை ஐந்து ஆட்டத்திற்கு இரண்டு ஆட்டங்கள் விளையாட வேண்டும் என்று நான் கூற மாட்டேன். எட்டு ஆட்டங்களுக்கு இரண்டு ஆட்டங்கள் இப்படி விளையாடினால் கூட போதும். ஆனாலும் அவரது நிலைத்தன்மை இப்பொழுது சிறப்பாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!