சுப்மன் கில்லை நம்ப வேண்டும்.. ஸ்டீவ் வாக் எங்களுக்கு இதை சொல்லி இருக்காரு – மேத்யூ ஹைடன் பேட்டி

0
149
Gill

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் 800-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சிறப்பான நிலையில் இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். ஆரம்பத்தில் சரியாக ஆரம்பித்த அவரால் மேற்கொண்டு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனாலும் கூட அவருக்கு டி20 உலக கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்ட காரணத்தினால் அவருடைய பேட்டிங் செயல் திறன் பாதிக்கப்பட்ட இருக்கிறதா என்பது குறித்து வெளியில் பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரால் ஒரு கேப்டனாகவும் நல்ல பேட்ஸ்மேனாகவும் திரும்பி வர முடியும் என மேத்யூ ஹைடன் நம்புகிறார்.

இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” ஒரு கேப்டனாக தனது ஏற்படுத்திக்கொள்ள கில் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா அணியில் எங்கள் எல்லோருக்கும் ஒருமுறை ஸ்டீவ் வாக் கூறும்போது ‘ நான் கேப்டனாக இருப்பதால் யாரும் காத்துக் கொண்டே இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கேப்டன் போல இருங்கள். மேலும் உங்கள் மாநில அணிக்கு திரும்பும்போதும் நீங்கள் அப்படியே செயல்படுங்கள். அங்கிருந்து நீங்கள் தேசிய அணிக்கு வரும் பொழுது கேப்டனாக என்னுடைய வேலை எளிதாகிவிடும்’ என்றார்.

தற்போது கில்லை அவருடைய அணியில் இருக்கும் வீரர்கள் ஒரு கேப்டனாக நம்பவும் மதிக்கவும் வேண்டும். கேப்டனாக அவரால் முடியுமா? என்பதில் நான் மிகவும் உறுதியாக அவரால் முடியும் என்று நம்புகிறேன். மேலும் பேட்டிங்கும் சிறப்பாக செல்வதற்கான அறிகுறிகளை நான் பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக.. புள்ளி விபரங்களுக்கு எதிராக பேசிய கங்குலி.. சரியாக வருமா ரசிகர்கள் கவலை

அவர் குறித்து பேசும் பொழுது அவர் எவ்வளவு வயது குறைவானவராக இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். அவர் அடுத்த தலைமுறைக்கான வீரராக இருக்கிறார். மேலும் இயல்பாகவே கேப்டன் போலத்தான் செயல்படுகிறார். மேலும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் ஒரு அமைதியான கேப்டன்” என்று கூறியிருக்கிறார்.