ரோகித் கோலி.. இந்த 2 நாள் மட்டும் இத செய்விங்களா?.. இதுதான் உங்களுக்கு கடைசி – முகமது கைப் கருத்து

0
203
Kaif

இந்திய டி20 அணியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சேர்க்கப்படாமல் இருந்த நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த இருவர் குறித்தும் முகமது கைஃப் முக்கிய விஷயம் ஒன்றைப் பேசியிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. மேலும் அதற்கு அடுத்து வந்த ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர்களிலும் இடம் பெறவில்லை. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார்கள்.

- Advertisement -

எனவே இவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம்பெறுவது உறுதியான விஷயமாக இருந்தது. மேலும் இவர்கள் இருவருக்கும் இதுவே வெள்ளை பந்து கிரிக்கெட் வடிவத்தில் கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் என முகமது கைஃப் கருதுகிறார்.

இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது ” ரோகித் சர்மாவுக்கு அவரை நீண்ட காலம் விளையாட போவது இல்லை என்பது தெரியும். அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள்தான் விளையாடப் போகிறார் மேலும் விராட் கோலியும் அவ்வளவு ஆண்டுகள்தான் விளையாடுவார்.

எனவே இது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தில் உலகக்கோப்பையை வெல்வதற்கான கடைசி வாய்ப்பு. அவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக விளையாடி தோற்று விட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்கள விட சிறந்த பவுலிங் வேற யார்கிட்டயும் கிடையாது.. இத நீங்களே பாருங்க – ஷாகித் அப்ரிடி பேச்சு

குரூப் கட்டத்தில் இந்தியாவுக்கு பெரிய போட்டிகள் கிடையாது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு போட்டியில் மட்டும் தான் இந்திய அணிக்கு பெரிய சவால்கள் இருக்கிறது. இந்த இரண்டு நாட்களுக்கும் இவர்கள் தயாராக இருக்கிறார்களா? ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்த இரண்டு நாட்களும் மிக முக்கியமானவை” என்று கூறியிருக்கிறார்.