எங்கள விட சிறந்த பவுலிங் வேற யார்கிட்டயும் கிடையாது.. இத நீங்களே பாருங்க – ஷாகித் அப்ரிடி பேச்சு

0
757
Shahid

இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் போதும் போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியிடம்தான் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியிருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், பாகிஸ்தான் அணியின் படுதோல்வியின் காரணமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.பிறகு வெள்ளைப் பந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ஷாகின் அப்ரிடி வந்தார். ஆனால் அவருடைய கேப்டன்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சரி வரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு ஓய்வில் இருந்த இமாத் வாசிம் மற்றும் முகமது அமீர் ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தற்பொழுது பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது.

தற்போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு வரிசையை பற்றி பேசிய ஷாகித் அப்ரிடி “உலகில் எந்த அணியிலும் இவ்வளவு வலிமையான பந்துவீச்சு வரிசை இல்லை என்று நினைக்கிறேன். எங்களுடைய நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் மிகவும் திறமையானவர்கள். பெஞ்சில் அமரும் நிலையில் இருக்கும் அப்பாஸ் அப்ரிடி போன்ற பந்துவீச்சாளர்கள் கூட மெதுவான பந்துகளை வீசுவதில் மிகவும் திறமைசாலிகள்.

இது போன்ற சிறந்த திறமைகள் கொண்ட பந்துவீச்சாளர்கள், டி20 உலகக்கோப்பை தொடரில் நுழையும் பொழுது, அவர்கள் பெரிய பெயர்களாக அறியப்படும் பெரிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் சதாப் கான் பந்துவீச்சில் சிறப்பாக வந்த பொழுதெல்லாம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்கிறது. எனவே எனக்கு அவர் சிறப்பாக விளையாட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ.. இந்த 4 டீம்தான் அரையிறுதிக்கு போகும்.. ஆப்கான் உள்ளே ஆஸி வெளியே- லாரா கணிப்பு

நேற்று நான் அவரை அழைத்துப் பேசினேன். ஏனென்றால் தற்போது அவர் கொஞ்சம் கடினமான நேரத்தில் இருக்கிறார். நான் இப்படி இருக்கும் வீரர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். அவர் பந்துவீச்சில் என்ன தவறு செய்கிறார் என்று கூறினேன். அவரிடம் பயிற்சி அமர்வுகளில் வித்தியாசத்தை காண முடியும்” என்று கூறியிருக்கிறார்.