2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் 10 அணிகள் விளையாட இருக்கின்றன.
இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் துவக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. மேலும் அரை இறுதிப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வைத்து நடைபெற இருக்கின்றன. உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
இந்த அணிகளில் மாற்றங்கள் செய்வதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும். உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சிகர்களிடையே அதிகமாக நிலவி வருகிறது . மேலும் இந்தியா சமீப காலங்களில் ஒரு நாள் போட்டி தொடர்களில் சிறப்பாக ஆடி வருவதால் இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.
2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடர்களில் சற்று சறுக்களை சந்தித்தது என்றே கூறலாம். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் நிலவி வருகிறது.
வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது . அந்த அணியில் 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் . சமீபகாலமாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கேஎல் ராகுல் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இளம் வீரரான திலக் வர்மாவும் ஆசிய கோப்பை காண இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் .
உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் சீடர்கள் பெரும்பாலும் இந்த ஆசிய கோப்பை போட்டி அணியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது எனவும் பிசிசிஐ-க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் வர்ணனையாளர்களும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்தியாவின் உபதேச அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹேடன் உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் உத்தேச பட்டிகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருக்கிறார் .
அந்தப் பட்டியலில் ரோகித் சர்மா,கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், அக்சர் பட்டேல், சார்துல் தாகூர், முகமது சிராஜ், முகமது சமி மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் ஆச்சரியமாக பிரத்தியேக சுனர்பூந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மற்றும் சகால் ஆகியோர் இடம்பெறவில்லை மேலும் ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் வீரரான திலக் வர்மாவுக்கும் இடமில்லை என்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் திலக் வர்மா. இவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாமல் திறமையான ஃபீல்டராக இருப்பதோடு பகுதி நேர பந்துவீச்சாளரும் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக விளையாடிய இவரை இந்திய உலகக்கோப்பை அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில் மேத்யூ ஹெய்டன் அணியில் திலக் வர்மா இடம் பெறாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.