யுவி பாஜி இந்த விஷயத்தில் நான் அவரை விட பெஸ்ட்னு சொல்வார்.. இப்ப ஹேப்பியா இருப்பார் – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
179
Abhishek

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய இளம் வீரராக, ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இடதுகை வீரர் அபிஷேக் ஷர்மா வெளிப்பட்டு இருக்கிறார். மேலும் இவருடைய மென்டராக இருந்து வரும் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குறித்து பேசியிருக்கிறார்.

அபிஷேக் ஷர்மா இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பஞ்சாப் அணி இந்தமுறை இந்திய உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் இவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

மேலும் அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் பிளாஸ்டராக தன்னை கட்டமைத்துக் கொண்டு வருகிறார். சேவாக் போல முதல் பந்தில் ஆரம்பித்து ஆட்டம் இழக்கும் வரை தைரியமாக விளையாடுவது அவருடைய பாணியாக இருக்கிறது. இவருடைய தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அபிஷேக் ஷர்மா யுவராஜ் சிங் போல இடது கை சுழல் பந்துவீச்சாளராகவும் இருந்து வருகிறார். ஆனால் அவர் பந்து வீசுவதற்கு சரியான வாய்ப்புகள் ஹைதராபாத் அணியில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் எதிராக நாக் அவுட் போட்டியில் கிடைத்த வாய்ப்பில், நான்கு ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் தந்து முக்கிய இரண்டு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இதுகுறித்து பேசி இருக்கும் அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “என்னுடைய அப்பா ஒரு இடது கை சுழல் பந்துவீச்சாளர் என்கின்ற காரணத்தினால் அவர் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன். என்னுடைய பந்துவீச்சில் அவர் மிகவும் உழைத்து வருகிறார். நான் என் பந்துவீச்சில் தொடர்ந்து கஷ்டப்பட்டு சிறப்பாக உழைத்தால் என்னால் எனது அணிக்கு ஏதாவது செய்ய முடியும் என்று தெரியும். ஜூனியர் கிரிக்கெட்டில் பந்துவீசி நிறைய விக்கெட் கைப்பற்றி இருக்கிறேன். இந்தவாய்ப்புக்காகக் காத்திருந்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க உலக கோப்பையை ஜெயிக்கிறது இப்படிதான்.. அது பல காலத்துக்கு நினைவுல இருக்கனும் – பாட் கம்மின்ஸ் விளக்கம்

யுவி பாஜி உடன் நான் பந்து வீசுவது பற்றி உரையாடும்போதெல்லாம், நான் அவரை விட சிறந்த பந்துவீச்சாளராக வர முடியும் என்று அவர் எப்பொழுதும் கூறி வந்தார். இது என்னுடைய மனதில் தொடர்ந்து இருந்து வந்தது. தற்பொழுது நான் பந்து வீசிய விதத்தில் அவரும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.