ஐபிஎல் 2024

சிஎஸ்கேல நான் இருப்பனான்னு தெரியல.. ஆனா ஐபிஎல் 2025-ல் இது கண்டிப்பா நடக்கும் – பதிரானா உறுதி

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெறும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா சிஎஸ்கே குறித்தும் அடுத்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி குறித்தும் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்குப் பிறகு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்காத வேகப்பந்து வீச்சாளர் ஆன மதீஷா பதிரானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அப்போதைய கேப்டன் இவரது திறமையை பார்த்த மகேந்திர சிங் தோனி இவருக்கான வாய்ப்பினை கொடுத்தார். 2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் காலடி எடுத்து வைத்தாலும், அந்த சீசனின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த இரண்டு போட்டியிலும் சேர்த்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். 2023ஆம் ஆண்டு முழு நேர பந்துவீச்சாளராக மாறியவர், அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு போட்டியில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

இருப்பினும் கடந்த சீசனில் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் அடுத்த சீசனுக்கான தக்கவைப்பு வீரர்களிலும் சென்னை அணியில் இவரது பெயர் முக்கியமாக இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மகேந்திர சிங் தோனியின் மீது அலாதியான அன்பு கொண்டவர்.

- Advertisement -

தனது தந்தைக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் களத்தில் தனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக தோனி உதவி இருக்கிறார் என்றும், அடுத்த சீசனில் தோனி கண்டிப்பாக விளையாட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவர் சென்னை அணிதான் அடுத்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:எனக்காக பிசிசிஐ-யை தப்பா பேசாதிங்க.. உண்மையில் உள்ளுக்குள் இதுதான் நடந்தது – நடராஜன் விளக்கம்

இது குறித்து அவர் கூறும் பொழுது “2025ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இருப்பேனோ இல்லையோ அல்லது சென்னை அணி என்னை தக்க வைக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் நிச்சயமாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று நினைக்கிறேன்” என்று சென்னை மீதான அன்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -
Published by

Recent Posts