3வது நாளாக மேட்ச்.. “நைட்டே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டோம்”.. தயாரானது எப்படி? – கேப்டன் ரோஹித் சர்மா ஆச்சரியமான தகவல்!

0
154
Rohit

இந்திய அணி இன்று ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றில் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது!

இந்திய அணி இதற்கு முன்பாக மழையின் காரணமாக தடைப்பட்ட பாகிஸ்தான் போட்டியை இரண்டு நாட்கள் தொடர்ந்து விளையாடி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக களம் இறங்குகிறது.

- Advertisement -

இரண்டாவது சுற்றின் போட்டிகள் எல்லாம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்க இருக்கின்றன என்பது அறிந்ததே. ஆனால் இந்திய அணி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆடுகளம் இன்றைக்கு கிடையாது. இது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது சுற்று போட்டி நடைபெற்ற ஆடுகளம்.

எனவே இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் அணியில் மிதவேகப் பந்துவீச்சாளர் சர்ததுல் தாக்கூருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

இன்று போட்டி நடைபெறும் ஆடுகளம் பெரிதாக ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது, அதே சமயத்தில் இரவில் மின் விளக்குகளின் கீழ் வேகப்பந்துவீச்சு எடுபடும். மேலும் இது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம். எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதை தேர்ந்தெடுத்ததோடு, அணிக்குள் சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேலையும் கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக களம் இறங்குகின்ற நிலையில், இன்று முதலில் பேட்டிங் செய்வது இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல விஷயமாக அமையும். அவர்கள் தற்பொழுது உடனடியாக களத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்த ரோஹித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். மூன்றாவது நாளாக களம் இறங்குவது ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் சந்திக்கும் சவால். ஒரு வீரராகவும் ஒரு அணியாகவும் உங்கள் மீது பல சவால்கள் தொடர்ந்து வீசப்படும்.

நேற்று இரவு ஆட்டம் முடிந்ததும் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும், உடலை மீட்டுக் கொள்வதற்கு நீச்சல் குளத்தில் இறங்க முடிவு செய்தோம். அதே இந்த இரண்டு ஆட்டங்களுக்கு முன்பாக எங்களுக்கு ஐந்து நாட்கள் இடைவெளி இருந்தது.

கடைசி ஆட்டம் எங்களுக்கு நன்றாக இருந்தது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். பிறகு நாங்கள் இரண்டாவது பந்துவீச்சில் இலக்கை காப்பாற்ற மிகச் சிறப்பாக செயல்பட்டோம்.

ஆனால் இது மீண்டும் ஒரு புதிய நாள். புதிய விளையாட்டு. ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக வறண்டதாகத் தெரிகிறது.ஆடுகளத்தில் புல் கிடையாது. எனவே நாங்கள் சர்துலுக்கு பதிலாக அக்ஸரை கொண்டு வந்தோம். இந்த ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க கூடும். அதே சமயத்தில் எங்களிடம் தரமான மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!