ஆசியக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான மாஸ் இந்தியன் பிளேயிங் XI.. திலக் வர்மா?.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

0
1910
Tilak

இந்திய அணி தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக மற்ற வடிவிலான கிரிக்கெட் தொடர்களை எல்லாம் முடித்துக் கொண்டு இருக்கிறது. பும்ரா தலைமையில் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது!

இதற்கு அடுத்து இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை தொடரையும், உள்நாட்டில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு முன்பாக விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில், பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிரான போட்டியின் மூலமாகத் துவங்குகிறது.

இந்த ஆசியக் கோப்பைக்காக சில நாட்களுக்கு முன்பு 17 பேர் கொண்ட அணியை இந்திய தேர்வுக்குழு அறிவித்தது. இதில் மிக முக்கியமாக காயத்தில் இருந்து கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்ப வந்திருக்கிறார்கள். 20 வயதான திலக் வர்மாவுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார். அணியில் ஆப் ஸ்பின்னர்கள் யாரும் கிடையாது.

இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் செப்டம்பர் இரண்டாம் தேதி இலங்கை பல்லகலே மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது. முதல் சுற்றின் கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் செப்டம்பர் 4ஆம் தேதி நேபாள் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதுவதற்கான உத்தேச பிளையிங் லெவனை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” என்னுடைய மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா சமி மற்றும் சிராஜ். ஹர்திக் பாண்டியா எனது நான்காவது வேகப்பந்து வீச்சாளர். எனது சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் மற்றும் ஜடேஜா. முதல் மூன்று இடத்தில் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி. விக்கெட் கீப்பராக கே எல் ராகுல்.

மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் இல்லை திலக் வர்மா இருவரில் ஒருவர் விளையாடலாம். ஏன் திலக் வருமா விளையாட வேண்டுமென்றால் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் அவர் ஒருவர் மட்டுமே இடதுகை வீரராக இருக்கிறார். மிடில் வரிசையில் அவரை எப்படியாவது நுழைக்க பார்க்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

ஆசியக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்/ திலக் வர்மா, கே.எல். ராகுல் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.