” சிறப்பாக ஆடினாய் மார்னஸ் ” பவுன்சர் பந்தைச் சாமர்த்தியமாக ஆடியப் பின் தன்னைத் தானே புகழ்ந்துக் கொண்ட மார்னஸ் லபுஷேனின் வீடியோ இணைப்பு

0
162
Marnus Labuschagne

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்த டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று விளையாடாத காரணத்தினால், அந்த அணியை ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கி வருகிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் விளையாடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாத காரணத்தினாலேயே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது என ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இன்று தொடங்கியுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிதான ஆட்டம் ஆடி வரும் ஆஸ்திரேலியா

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்க்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். முதல் விக்கெட் இழந்த நிலையில் மறுபக்கம் ஸ்ட்ரைக்கில் இருந்த டேவிட் வார்னரும், பின்னர் வந்த மார்னஸ் லாபஸ்சாக்னேவும் இணைந்து மிக நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பக்கம் டேவிட் வார்னர் 159 பந்துகளில் 84 ரன்களிலும் மறுபக்கம் மார்னஸ் லாபஸ்சாக்னே 191 பந்துகளில் 65 ரன்கள் குவித்து, இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர்.

பவுன்சர் பந்துகளை சாமர்த்தியமாக கையாளும் மார்னஸ் லாபஸ்சாக்னே

மார்னஸ் லாபஸ்சாக்னேவுக்கு பவுன்சர் பந்துகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அப்போது வீசி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பந்துகளை மிக நிதானமாக கணித்து அவர் விளையாடி வருகிறார். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஓவரில் தலைக்கு வந்த பவுன்சர் பந்தை சாமர்த்தியமாக கணித்து, கீழே அமர்ந்து அந்த பந்தை அவர் தவிர்த்தார்.

- Advertisement -

பின்னர் தனக்கு தானே அவர், ” மிக அற்புதமாக விளையாடி விட்டாய் மார்னஸ் லாபஸ்சாக்னே, அற்புதமாக விளையாடிவிட்டாய்” என்று கூறிக் கொண்டார். இவ்வாறு அவர் தன்னைத்தானே பாராட்டிக் கொண்ட உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வகையில் ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.