இரண்டே முறைதான் நடந்திருக்கு.. டேவிட் வார்னர் தன்னை விமர்சித்ததற்கு லபுசேன் பதிலடி.. என்ன நடந்தது?

0
258
David Warner and Labuschagne

ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான டேவிட் வார்னர் தன்னை விமர்சித்ததற்கு மார்னஸ் லபுசேன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மலிவான முறையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் லபுசேன் விக்கெட்டை கொடுத்து இருந்தார். அவர் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்தது. அவர் கால்கள் பெரிய அளவில் நகராமல் மிகச் சுலபமாக விக்க
கெட்டை கொடுத்தார்.

- Advertisement -

டேவிட் வார்னர் விமர்சனம்

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான நேரத்தில் பேட்டிங் செய்வதற்கு கடினமான நிலையில் தாக்குப் பிடித்து விளையாடி 64 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் தன் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் லபுசேன் மேல் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு தகுந்தபடி அவர் விளையாடவில்லை என்றும், இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்த காரணத்தினாலே அவர் அரைசதம் அடித்தார் என்றும், இந்த அரை
சதத்தை வைத்து அவர் மீண்டு வந்து விட்டார் என எடுத்துக் கொள்ள முடியாது, அவர் வழக்கமான முறையில் டெல்லியில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து விட்டார் என டேவிட் வார்னர் விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

லபுசேன் தந்த பதிலடி

இதுகுறித்து லபுசேன் பதில் அளிக்கும் போது ” நான் எத்தனை முறை கல்லியில் ஆட்டம் இழந்து இருக்கிறேன் என்பதை டேவிட் வார்னர் சரி பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனென்றால் நான் ஒவ்வொரு வாரமும் வெளியில் வந்து விளையாட போகிறேன்”

இதையும் படிங்க: கம்மின்ஸ் பேசியதைப் பற்றி எந்த பயமும் இல்ல.. அவர் பெருசா சாதிக்கவும் இல்ல – சுப்மன் கில் பேச்சு

“நான் அவர் பேசியதை வைத்து திரும்பி பார்க்கும் பொழுது மொத்தமாக இரண்டு முறை மட்டுமே கல்லியில் ஆட்டம் இழந்து இருப்பதாக நினைக்கிறேன். எனவே தான் அவர் சொன்னது போல அதிகம் முறை அங்கே ஆட்டம் இழக்கவில்லை. மேலும் பலரும் இதுபோல இப்பொழுது செய்தித்தாள்களில் கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டார்கள்” என்று வார்னரை விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -