நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மிங் கூறிய ஒரு விஷயம் பற்றி தங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை என சுப்மன் கில் கூறியிருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டியை வெல்லும் அணி இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகளை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸ் அச்சுறுத்தல் பேச்சு
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ஷார்ட் பால் திட்டம் இரண்டாவது டெஸ்டில் பலன் அளித்த காரணத்தினால் மூன்றாவது டெஸ்டிலும் அதை தாங்கள் கொண்டு வருவதற்கு அதிகபட்ச சாத்தியம் இருப்பதாக கூறியிருந்தார்.
இப்படியான பந்துகள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அசவுரியத்தை உருவாக்கினாலும், சில சூழ்நிலைகளிலும் தேவைப்படுவதாக அமைந்தாலும், அதை பிளான் பி யாக தாங்கள் கொண்டிருப்போம் என ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். இதன் மூலம் தலையை குறி வைத்து பந்துகள் வரும் என்று மறைமுகமாக அறிவித்து இருந்தார்.
கம்மின்ஸ் அதில் சாதிக்கவில்லை
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுப்மன் கில் ” பேட் கம்மின்ஸ் ஷார்ட் பந்தில் ப்ராப்பர் பேட்ஸ்மேனின் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். மற்றபடி அவர் அந்த முறையில் கைப்பற்றிய விக்கெட்டுகள் எல்லாமே கடைசியில் பேட்டிங் செய்ய வந்த பவுலர்களின் விக்கெட்டுகள்தான். அதனால் அவர் என்ன ஷார்ட் பால் திட்டத்தை பற்றி பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: 56 பந்து.. ரகானே ருத்ரதாண்டவம்.. பாண்டியா பிரதர்ஸ் அணி தோல்வி.. மும்பை பைனலுக்கு தகுதி – SMAT 2024
“மேலும் நான் விளையாடிய வரையில் நல்ல முறையில் உணர்ந்தேன். ஆரம்பத்தில் சில அசௌரியங்கள் எனக்கு இருந்தது. நான் ஒரு ஃபுல் பந்தை தவறவிட்டேன். மேலும் பிங்க் நிற பந்தை கையில் இருந்து வெளியேறும்போது கணிப்பதில் எனக்கு பின்னடைவு உண்டானது. ஆனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்னால் ரன்கள் குவிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.