ஏற்கனவே கேஎல் ராகுல் இல்லை, இப்போது இன்னொரு வீரரும் விலகல்… பிளே-ஆப் சுற்றுக்கு முன் சிக்கலில் லக்னோ அணி! – மும்பை அணிக்கு இது சாதகமா?

0
18642

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆப் போட்டிக்கு முன் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் முன்னணி வீரர் விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அணியின் தரப்பில் இருந்து என்ன கூறப்படுகிறது என்பதை பின்வருமாறு காண்போம்.

ஐபிஎல் லீக் சுற்றுகள் கடைசி நாள் கடைசி லீக் போட்டி மற்றும் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பில் முடிந்தது. பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் தேர்வாகியது. அதன் பிறகு சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் தகுதி பெற்றன. கடைசியாக ஆர்சிபி அணியின் வெற்றி தோல்வியை சார்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது.

- Advertisement -

வருகிற 23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன அதன் பிறகு எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலும் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது காயத்திற்கு அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டார் கேஎல் ராகுல்.

ராகுல் இல்லாத சூழலில் லக்னோ அணிக்கு க்ருநாள் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு லக்னோ அணியை பிளே-ஆப் சுற்றுக்கும் எடுத்துச் சென்றுள்ளார். பரபரப்பாக நடந்த கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி லக்னோ அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லக்னோ அணி மூன்றாவது இடத்தையும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்தையும் பெற்றது. ஆகையால் எலிமினேட்டர் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

இந்த எலிமினேட்டர் போட்டிக்கு முன்பாக லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடர் வரவிருப்பதால் நாடு திரும்புகிறார் என்கிற தகவல்கள் வந்துள்ளன.

மார்க் வுட் இந்த சீசனில் நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிகபட்சமாக டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சீசன் நடுவில் தனக்கு குழந்தை பிறந்த காரணத்திற்காக சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஐபிஎல் திரும்பினார். மைதானத்தின் பிட்ச் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் இவரை விளையாட வைக்கவில்லை.

எலிமினேட்டர் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுவதால் இங்கு மார்க் வுட் பந்துவீச்சு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆகையால் அவரை விளையாடவைப்பார்கள் எனவும் கருதப்பட்டது. ஆனால் வருகிற ஜூன் 1ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. அதில் மார்க் வுட் இடம்பெற்றிருக்கிறார். ஆகையால் இங்கிலாந்துக்கு செல்கிறார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதி ஆஷஸ் தொடர் துவங்குகிறது. இதிலும் மார்க் வுட் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடர்களில் மார்க் வுட் முக்கிய வீரராக கருதப்படுகிறார். ஏனெனில் முன்னணி வேகபந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் ஆகியோர் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளனர். ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இதனால் மார்க் வுட் மீது கவனம் திரும்பியுள்ளது. இதற்காக தான் நாடு திரும்புருக்கிறார் என கூறப்படுகிறது.