உலக கிரிக்கெட்

அனல் பறக்கும் பந்துவீச்சு.. 5 நிமிடத்தில் தன் சாதனையை தானே உடைத்த மார்க் வுட்.. வேகத்தில் புது ரெக்கார்ட்

தற்போது இங்கிலாந்து நாட்டிங்ஹாம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தனது அதிவேக பந்துவீச்சில் புதிய உலகச் சாதனையை இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் படைத்திருக்கிறார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி வழக்கம்போல பாஸ்பால் முறையில் அதிரடியாக விளையாடியது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு துணை கேப்டன் ஒல்லி போப் 121, பென் டக்கெட் 71, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் வந்து வீச்சு தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிசை விளையாடி வரும் வெஸ்ட் இண்டிஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் தற்பொழுது எடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் இதில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு முதல் டெஸ்டில் விளையாடாத மார்க் வுட் இரண்டாவது டெஸ்டில் இடம் பெற்றார். அவர் தான் வீசிய முதல் ஓவரில் மணிக்கு 92 மைல் வேகத்தில் ஆரம்பித்து, 96.5 மைல் வேகத்தில் மணிக்கு வீசி, அந்த ஓவரில் சராசரியாக எல்லா பந்துகளையும் 92 மைல் வேகத்தில் வீசி, ஒரு ஓவரில் சராசரியாக அதிக வேகத்தில் இங்கிலாந்தில் சிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க : கம்பீர் உங்களுக்கு கேப்டனா பயிற்சியாளரா அனுபவம் இருக்கு.. அப்புறம் ஏன் இப்படி செஞ்சிங்க? – முகமது கைப் கேள்வி

இதற்கடுத்து தொடர்ந்து வீசிய அவர் மூன்றாவது ஓவரில் மணிக்கு 93 மைல் வேகத்தில் ஆரம்பித்து, அதே ஓவரில் அதிகபட்சமாக மணிக்கு 97.1 மைல் வேகத்தில் வீசி ஆச்சரியப்படுத்தினார். இந்த ஓவரில் அவருடைய வேக சராசரி மணிக்கு 93 மைல் வேகத்தில் இருந்தது. தான் உருவாக்கிய சாதனையை, அடுத்து தான் வீசிய ஓவரிலேயே உடைத்து மீண்டும் புதிய சாதனையை படைத்தார். இங்கிலாந்தில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் வீசிய அதிகபட்ச வேக சராசரியாக இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by

Recent Posts