“டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கூட பேட்டிங் பயிற்சி செய்கிறார்.. தம்பி உன் பிரச்சனை இதான்” – மார்க் வாக் கோரிக்கை

0
169
Mark

ஒரு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு ராகுல் டிராவிட் அல்லது இரண்டு சச்சின் டெண்டுல்கர் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு ஜோடியாக தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேன் இருவரும் இருக்கிறார்கள்.

இருவரும் ஒரே மாதிரியான பேட்டிங் பாணியை கொண்டவர்கள். மேலும் இவர்களது பேட்டிங் அணுகுமுறை மட்டுமல்லாமல் மனநிலையும் ஒரே மாதிரியானது. விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி, களத்தில் எவ்வளவு நேரம் என்றாலும் நின்று, எதிரணியை சோர்வடைய வைத்து ரன்கள் எடுப்பதில் திறமைசாலிகள்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆசஸ் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் காயம் பட, அவருடைய இடத்தில் வாய்ப்பு மார்னஸ் லபுசேனுக்கு கிடைத்தது. அந்த ஒரே ஒரு வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர், அங்கிருந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நிரந்தர வீரராக மாறினார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஒரே மாதிரியான திறமைகள் கொண்ட மிகச் சிறப்பான இரண்டு வீரர்கள் இடம் பெற்று இருப்பது, அந்த அணியின் பேட்டிங் பலத்தை வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால் தற்பொழுது சிலபல டெஸ்ட் போட்டிகளாக அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவரை அதிரடியாக நீக்கவும் செய்யலாம் என்கின்ற பேச்சுகள் இருக்கிறது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய லெஜெண்ட் மார்க் வாக் லபுசேன் பற்றி கூறுகையில் “எனக்கு அவர் பேட்டிங் ஃபார் மை விட கவலையான விஷயம் என்னவென்றால் அவர் கிரிக்கெட்டில் காட்டும் தீவிரம்தான். அவர் கிரிக்கெட்டை சாப்பிடுகிறார், கிரிக்கெட்டைகுடிக்கிறார், கிரிக்கெட்டோடு தூங்குகிறார். இப்படி அவர் எப்பொழுதும் கிரிக்கெட்டோடு இருக்கிறார்.

ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அவரைப் பார்க்கும் பொழுது, அவர் முதுகில் ஒரு பையன் இருந்தது, மேலும் கையில் பேட் வைத்திருந்தார். அங்கும் கூட அவர் தன் கையில் இருக்கும் பேட்டை வைத்து நிழற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அவர் இப்படி தீவிரமாக கிரிக்கெட்டில் இருப்பதிலிருந்து கொஞ்சம் வெளியில் வரவேண்டும்.

அவர் 24 மணி நேரமும் பேட்டிங் செய்வதை பற்றி சிந்திப்பதை விட்டு, மேலும் அவருக்கு ஆட்டத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் கிடைத்தால் எளிதாக திரும்பி வந்து விடுவார். அவர் கிரிக்கெட்வாழ்க்கையின் முதல் பகுதியில் அதிர்ஷ்டம் இருந்தது. ஆனால் தற்பொழுது இரண்டாவது பகுதியில் அது இல்லாமல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : “அஸ்வின் என் போனை கட் பண்ணிட்டார்.. இதுதான் முன்னாள் வீரர்களுக்கு தரும் மரியாதையா?” – எல்.சிவராமகிருஷ்ணன் பேச்சு

தேர்வுக் குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைப்பார்கள் என நான் நிச்சயம் நம்புகிறேன். கடந்த காலத்தில் அவர் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான வீரர் ஆனால் தற்போது குழப்பத்தில் இருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.