இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளராக விளங்கிய மார்க் பவுச்சர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதில் பும்ரா ஐந்து விக்கெட் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தாலும் மற்ற வீரர்கள் குறைவான பங்களிப்பை வழங்கிய நிலையில் இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை.
தொடரில் தற்போது பின் தங்கியிருக்கும் இந்திய அணி இன்று நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகிறது. இந்த சூழ்நிலையில் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் பும்ராவின் விருப்பத்தை விட அணியின் நலன் முக்கியம் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஆசையை விட நலன் முக்கியம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து தற்போது பெரிய பேசு பொருளாக இருக்கப் போகிறார். இது நிச்சயமாக பேசுபொருளாக இருக்கப் போகிறது என்று தெரியும். முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு பும்ரா ஆறு நாள் இடைவெளியில் விளையாடுகிறார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட விரும்புகிறார் என்று எனக்கு தெரியும்.
இதையும் படிங்க:கம்பீர் கில் நீங்க தீவிரமா அர்ப்பணிப்பா இருக்கீங்களா?.. அப்ப 2வது டெஸ்ட்ல இத செய்யுங்க – அஸ்வின் கோரிக்கை
ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியின் தேவைகள் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் விளையாட விரும்புவதை விட முக்கியம் என்று உணர வேண்டும். இருப்பினும் யாருக்குத் தெரியும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு நன்றாக தயாராகி இருக்கலாம். எனவே கிடைக்கிற வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்” என பவுச்சர் பேசியிருக்கிறார். எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய காத்திருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.






