கம்பீர் கில் நீங்க தீவிரமா அர்ப்பணிப்பா இருக்கீங்களா?.. அப்ப 2வது டெஸ்ட்ல இத செய்யுங்க – அஸ்வின் கோரிக்கை

0
11
Ashwin

கம்பீர் மற்றும் கில் இருவரும் இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கு தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருந்தால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்தாக வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் அணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு வீரர் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் கில்லுக்கு கேள்வி இருக்கு

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் பொழுது “கில் மற்றும் கம்பீருக்கு 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு இருக்கும் தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்வி இருக்கிறது. அப்படி அவர்கள் இருவருக்குமே இதில் தீவிரமான அர்ப்பணிப்பு இருந்தால் நீங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடுவதை பார்ப்பீர்கள்”

“நாளை ஆடுகளத்தில் புல் அதிகமாக இல்லை என்றால் குல்தீப் யாதவ் கட்டாயமாக விளையாட வேண்டும். இதற்காக நீங்கள் விரும்பும் யாரையாவது தூக்கி எறியுங்கள். ஆனால் அவர் கட்டாயம் விளையாட வேண்டும். அவர் விளையாடினால் இங்கிலாந்தின் கடைசி கட்ட வீரர்கள் ரன் எடுக்க மாட்டார்கள்”

- Advertisement -

ரெண்டு பேர்ல யார் வேணாலும் ஓகே

“அர்ஷ்தீப் சிங் இடது கையில் கொண்டு வரும் கோணம் குறித்து நான் யோசிப்பேன். ஆனால் அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்கவில்லை. அதே சமயத்தில் ஆகாஷ் தீப் தன்னை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். எனவே நான் அதை மறக்க மாட்டேன். ஆனால் பும்ரா இல்லாவிட்டால் இந்த இருவரில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம்”

இதையும் படிங்க : நான் இந்தியாவின் கேப்டன் கிடையாது.. அந்த ஒரு விஷயத்தை அவங்கதான் முடிவு பண்ணனும் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

“மேலும் நான் பிரசித் கிருஷ்ணாவை விட மாட்டேன். ஏனென்றால் முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார். மேலும் நிதீஷ் குமார் ரெட்டியையும் இந்திய அணி நிர்வாகம் உயர்வாக மதிப்பிட்டு இருக்கிறது. அவர் விளையாடினாலும் சரிதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -