நிறைய வீரர்கள் காயம்.. இந்தியாவை தோற்கடித்தோம்.. WC-ல் நாங்க தான்.. ஷகீப் அல் ஹசன் பேட்டி.!

0
2800

இலங்கையில் நடைபெற்று வரும் 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பில் வைத்து நடைபெற்றது .

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் துவக்கத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி பங்களாதேஷ் அணியின் நான்கு விக்கெட்டுகளை 59 ரன்களுக்கு வீழ்த்தினர். ஆனால் ஐந்தாவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த ஷகீப் அல்ஹசன் மற்றும் தவ்ஹீத் ஹீர்தாய் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து பங்களாதேஷ் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

- Advertisement -

ஐந்தாவது விக்கெட் இருக்கு இந்த ஜோடி பார்ட்னர் சிறப்பாக 101 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷகீப் 85 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்து தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.தவ்ஹீத்   ஹீர்தாய்  சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்த இவரும் 54 ரன்கள் ஆட்டம் இழக்க 193 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த நசும் அகமது மற்றும் மெஹதி ஹசன் இருவரும் சிறப்பாக விளையாடி பங்களாதேஷ் அணி 250 ரன்கள் கடக்க உதவினர்.

இறுதியாக அந்த அணி 50 ஓவர்களில் 265 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா தூக்கத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா விக்கெட்களை இழந்தது. இதிலிருந்து இந்திய அணியை கில் மற்றும் கேஎல் ராகுல் மீட்டனர். இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வரும் நேரத்தில் 19 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த இஷான் கிஷான் 5 ரன்களிலும் சூரியகுமார் யாதவ் 26 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா ஏழு ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் ஒரு நாள் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை நிறைவு செய்தார் கில் மற்றும் அக்சர் படேல் ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 133 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருந்த கில் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தனியாக போராடிய அக்சர் பட்டேல் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார்..

- Advertisement -

இறுதியில் 9 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் அக்சர் பட்டேல் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழக்க இந்திய அணி கடைசி வரை போராடி 6 ரன்களில் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஸ்தபிஷர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளையும் தன்சிம் ஷகீப் மற்றும் மெஹதி ஹசன் இரண்டு விக்கெட் களை வீழ்த்தினர். பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கில் 80 ரன்கள் எடுத்த அவர் பந்து வீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் .

போட்டிக்குப் பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய அவர் “அதிகம் விளையாடாத இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க நினைத்தோம். கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து இந்த ஆடுகளும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம் . நான் இந்த போட்டியில் மேல் வரிசையில் ஆட வேண்டும் என்று நினைத்து ஐந்தாவது வீரராக களம் இறங்கினேன். ஆடுகளத்தில் சிறிது நேரம் நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்” எனக் கூறினார்

மேலும் தொடர்ந்து பேசிய ஷகீப் ” இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆரம்பத்தில் சீம் மூவ்மெண்ட் நன்றாக இருந்தது பந்து பழையதானதும் டேட்டிங்க்கு எளிதாக இருந்தது. எங்கள் அணியில் பல திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர். எங்கள் அணியின் மெஹதி ஹசன் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகளும் முக்கியமானவை. மேலும் கடைசி நேரங்களில் ஐந்து ஓவர்களை தொடர்ச்சியாக வீசுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல . எங்கள் அணியில் நிறைய வீரர்கள் காயம் காரணமாக அணிக்கு திரும்புவதும் பின்னர் வெளியே செல்வதுமாக இருக்கின்றனர். எங்கள் அணி மிகச் சிறப்பாக இருக்கிறது நடைபெற இருக்கின்ற உலகக் கோப்பையில் நாங்கள் ஒரு ஆபத்தான அணியாக இருப்போம்” என்று கூறி முடித்தார் ஷகீப் அல் ஹசன்.