“இந்த இந்திய வீரரை பற்றி நிறை கோச் சொல்லி இருக்காங்க… இவர ஆசியா கப்ல பார்க்க ஆவலா இருக்கேன்” – டிவிலியர்ஸ் எதிர்பார்ப்பு!

0
1493
Devilliers

கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் விளையாட்டை அணுகும் முறையை, ஒவ்வொரு வீரர்கள் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, கெவின் பீட்டர்சன் இந்த வரிசையில் ஏபி டிவில்லியர்ஸ் மிகவும் முக்கியமானவர்!

கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் சுழற்பந்து வீச்சில் ஸ்வீப் ஷார்ட் விளையாடுவது கூட ஆபத்தானதாகப் பார்க்கப்பட்டது. ஆனால் ஏபி டிவில்லியர்ஸ் வேகப்பந்திலேயே அதுவும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடும் அளவுக்கு, 360 டிகிரியில் பேட்டிங்கில் ஆக்ரோஷமான அணுகு முறையை விளையாட்டில் கொண்டு இருந்தார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவரான இவருக்கு, அவரது நாடு தாண்டி உலகத்தில் பல நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு இந்தியாவில் ரசிகர்களின் பலம் அதிகம். காரணம் ஐபிஎல் தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய விதம் இந்திய ரசிகர்களை இவர் பக்கமாக பெரிய அளவில் திருப்பி இருந்தது. சொல்லப்போனால் இவரை பிடிக்காதவர்களே யாரும் கிடையாது!

தற்பொழுது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்தும் தனது நண்பர் விராட் கோலி குறித்தும் கருத்துக்களை வெளியிடுவார். இதேபோல் உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் பேசி இருந்தார்.

விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்திருந்த ஏபி டிவில்லியர்ஸ் அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு என்றே இருப்பவர். அவர் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அவர் அந்த இடத்தில் வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று பேசி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்து கேப்டனாக பொறுப்பேற்று அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா குறித்து தனது கருத்தையும் எதிர்பார்ப்பையும் முன்வைத்து பேசி இருக்கிறார்.

இது குறித்து ஏ பி டி வில்லியர்ஸ் கூறும்பொழுது “காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் எப்படிப்பட்ட திறமைசாலி என்பதை, அயர்லாந்து தொடரில் தொடர் நாயகன் விருதை அவர் வென்றது காட்டுகிறது. அவர் எப்பொழுதும் விளையாட்டை விட்டு வெளியே செல்லமாட்டார் என்று பயிற்சியாளர்கள் சொல்லி நான் நிறையமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் ஆட்டத்தில் எனக்கு ஆச்சரியமில்லை. அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் ஆசியக் கோப்பையில் செயல்படுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!