இந்திய அணியால் ரோஹித் கோலி இந்த முடிவைதான் எடுக்க போறாங்க.. இந்திய முன்னாள் வீரர் தகவல்

0
15

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு வருகிற 19ஆம் தேதி முதல் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களாக திகழ்ந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர். மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு இவர்களின் பங்களிப்பு என்பது மிகவும் மகத்தானதாகும். இந்த சூழ்நிலையில் இந்த இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடரோடு ஓய்வு பெறும் முடிவில் இருந்தனர் என்றே கூறலாம்.

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இது அனைவரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இரு உலகக் கோப்பைகள் வென்று தர காரணமாக இருந்த கேப்டனை முக்கிய உலகக் கோப்பையை பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்திய அணி இப்படி முடிவு எடுத்திருப்பது சரியான விஷயம் கிடையாது என்று மனோஜ் திவாரி சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் போது சர்மா ஆகிய இருவரும் செய்த பங்களிப்பு போலவே அவர்களை இப்படி நடத்துவது அவமரியாதைக்கு குறைவில்லை. இந்த இருவரும் மிக விரைவிலேயே ஓய்வை அறிவிக்கலாம் என்று நான் உணர்கிறேன். ஒருவேளை அது ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

இதையும் படிங்க:ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் விருது.. 3 இந்திய வீரர்கள் போட்டி

ஒருவரை கேப்டனாக நியமிக்கும் போது போட்டிகளையும் தொடரையும் வெல்வதே குறிக்கோளாகும். ரோகித் சர்மா ஏற்கனவே அதை செய்து கொண்டிருந்தார். அணியின் செயல் திறன் சிறப்பாக இருந்தது முடிவுகள் சிறப்பாக வந்து கொண்டிருந்தன. எனவே இந்த மாற்றத்திற்கான அவசியம் என்ன என்று எனக்குப் புரியவில்லை” என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -