ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் விருது.. 3 இந்திய வீரர்கள் போட்டி

0
35

2025 செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான போட்டியில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 2025 ஆசிய கோப்பை வெற்றியில் காரணமான இந்திய  அணி வீரர்கள் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.  உலக டி20  பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் ஷர்மா இடம் பெற்றுள்ளார்.

25 வயதான அபிசேக, செப்டம்பர் மாதம்  ஏழு டி20களில் 314 ரன்களை அடித்தார். மூன்று அரை சதங்களுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடித்திருந்தார். இதன் காரணமாக தொடரின்சிறந்த வீரராக விருது பெற்றார். பஞ்சாப் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் ICC T20I ரேங்கிங்ஸில் உச்ச ரேட்டிங் சாதனையை உடைத்து, தனது முதல் இடத்தை உறுதிப்படுத்தினார்.

- Advertisement -

குல்தீப்க்கு கிடைக்குமா?

இந்தப் பட்டியலில் 2வது வீரராக குல்தீப் யாதவ் உள்ளார். தன்னுடைய அபாரமான பவுலிங் மூலம்  ஏழு இன்னிங்ஸ்களில் 17 விக்கெட்டுகளை எடுத்தார். 6.27 எகானமி ரேட்டுடன் உள்ளார். தொடக்க போட்டியில் UAE-க்கு எதிராக 4/7 என்ற பந்துவீச்சில் அசத்தினார்.

இந்தியா பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி ஒன்பதாவது ஆசிய கோப்பை வென்ற இறுதிப்போட்டியிலும் மற்றொரு நான்கு விக்கெட்டை வீழ்த்தினார்.. 30 வயதான குல்தீப், ஐசிசி தரவரிசை பட்டியலில் 9 இடங்கள் ஏறி 12-வது இடத்தை அடைந்தார். 3வது இடத்தில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் பிரையன் பென்னெட் உள்ளார்.

- Advertisement -

பெண்கள் பிரிவில் யார்?

ஒன்பது டி20 போட்டிகளில் 165.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 497 ரன்களை அடித்தார். இலங்கை மற்றும் நமீபியாவுக்கு எதிரான தொடரில் முன்னணி ரன் ஸ்கோரராக மாறிய பிறகு, ஆப்பிரிக்கா பிராந்திய T20 உலகக் கோப்பை இறுதியில் 111, 65, மற்றும் 72 ரன்களை அடித்தார். அவரது பேட்டிங் முயற்சிகள் மூலம் ஜிம்பாப்வேயை 2026 T20 உலகக் கோப்பைக்கு இடம்பெற்றது.

இதையும் படிங்க: இந்திய அணியில் இட ஒதுக்கீடு முறையா? கோலி, ரோகித் சுட்டிக்காட்டி ஆகாஷ் சோப்ரா பதில்

2025 செப்டம்பர் மாதத்துக்கான ICC பெண்கள்  பிரிவு பரிந்துரையில் இந்தியாவின் ஸ்ம்ருதி மந்தானா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தியாவின் துணை கேப்டன் ஸ்ம்ருதி மந்தானா 2025 செப்டம்பர் மாதத்துக்கான ICC பெண்கள் வீரர் மாத பரிந்துரையைப் பெற்றார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு ODI-களில் 77 சராசரியுடன் 135.68 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 308 ரன்களை அடித்தார்.

- Advertisement -