நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்விகளுக்கு பிறகும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் மிகவும் பிடிவாதமாக தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பேசி வருவதாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பேசியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விகளுக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தோல்வி பற்றி பேசும்பொழுது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பேசி வருவதாக மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.
சரியான மாற்றங்களை செய்யவில்லை
தற்போது சிஎஸ்கே அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் கான்வே விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் இரண்டாவது போட்டியில் செய்ய வேண்டிய இந்த முக்கிய மாற்றத்தை செய்யாமல் வேறு இரண்டு மாற்றங்கள் செய்தார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருப்பதால் இந்த மாற்றங்கள் குறித்து விமர்சனங்கள் உருவாகி இருக்கிறது.
மேலும் ஆர்சிபி அணியிடம் சொந்த மைதானத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்து இருந்தது. டி20 போட்டியில் 50 ரன்கள் என்பது மிகப்பெரிய வித்தியாசம். இந்த நிலையில் கேப்டன் ஒரு ருத்ராஜ் நல்லவேளை 50 ரன்களில்தான் தோற்றோம் என்று பேசி இருந்தார். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பதவியை காப்பாத்திக்க பார்க்கிறார்
இது குறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ருதுராஜ் பேசும் வார்த்தைகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் மிகவும் பிடிவாதமாக இருப்பது போல தெரிகிறது. அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய அந்த இடத்தில் 50 ரன்கள் தோற்றது மகிழ்ச்சி என்று கூறுகிறார். இதை எப்படி ஜீரணிக்க முடியும்”
இதையும் படிங்க : தோனி இனிமே பழச நினைக்க கூடாது.. அதெல்லாம் முடிஞ்சு போன கதை.. 5 வருஷம் ஆச்சு – சேவாக் விமர்சனம்
“ஒட்டு மொத்த உலகமும் தோனி மேலே வந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ருதுராஜை சுற்றி நிறைய அழுத்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரால் நினைப்பதை பேச முடியவில்லை. அவர் தற்போது கேப்டனாக இருக்கிறார். அவர் கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






