நேற்று இரண்டு ஓவர்களுக்கு 39 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று அசாம் கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது. இறுதி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இறுதியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. கடைசி நேரத்தில் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைக்க தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவால் முடியவில்லை.
பழைய பாணியால் வந்த தோல்வி
நேற்று மூன்று ஓவர்களுக்கு 45 ரன்கள் என்று இருந்தபோது, ஆட்டத்தின் 18 வது ஓவரை தீக்ஷனா வீச வந்தார். அந்த ஓவரில் இருந்து ரன் எடுக்க முயற்சி செய்யாமல் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பொறுமையாக விளையாடி தள்ளினார்கள். இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களுக்கு 39 ரன்கள் தேவை என்கின்ற சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பத்தொன்பதாவது ஓவரில் துஷார் தேஸ்பாண்டே வர, அந்த ஓவரில் 19 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த ஓவரை சந்திப் சர்மா வீச இந்த ஜோடியால் வெற்றிக்கான ரன்களை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தீக்ஷனா ஓவரையே அடித்து விளையாட முயற்சி செய்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாம் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
எப்போதோ செய்ததை இப்போது நினைக்க கூடாது
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் எடுப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அப்பொழுது களத்தில் எவ்வளவு பெரிய வீரர்கள் இருந்தாலும் அதை செய்ய முடியாது. இப்படியான நிலையில் ஒன்று அல்லது இரண்டு சூழ்நிலைகளில் உங்களால் வெற்றி பெற முடியும். ஆனால் எல்லா நேரங்களிலும் உங்களால் வெற்றி பெற முடியாது. ஐபிஎல் தொடரில் தோனி அக்சர் போட்டியில் மற்றும் இர்பான் பதான் ஓவர்களில் இப்படி கடைசியாக அடித்து வென்றிருக்கிறார். ஆனால் சிஎஸ்கே அணி கடைசியாக 180 ரன்கள் துரத்தி ஐந்து வருடம் ஆகிறது”
இதையும் படிங்க : அஸ்வினுக்கு முன்பு போல மரியாதை இல்லை.. அவர் புரிஞ்சுக்காம இந்த விஷயத்தை பண்றாரு – மைக்கேல் வாகன் பேட்டி
“நீங்கள் இப்படி வெற்றிகரமாக கடைசி இரண்டு ஓவர்களுக்கு 40 ரன்கள் என்று துரத்திய போட்டிகளை நினைத்தால் ஒன்று அல்லது இரண்டுதான் ஞாபகத்திற்கு வர முடியும். ஏனென்றால் உங்களால் எல்லா நேரத்திலும் இப்படியான ரன்களை துரத்தி வெல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.