விராட் ரோஹித் அத காப்பாத்த நினைச்சாங்க.. இப்ப கம்பீர் மொத்தமா முடிச்சுட்டு கதை சொல்றாரு – மனோஜ் திவாரி விமர்சனம்

0
19
Virat

தற்போது இந்திய கிரிக்கெட்டில் முழுமையான மாற்றம் என்ற பெயரில் நடந்து கொண்டு இருக்கும் விஷயங்கள் தவறானதாக இருக்கிறது என இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் உள்நாட்டில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மிகவும் தடுமாற்றத்துடன் செயல்படுகிறார்கள். இதன் காரணமாக நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்து வருகிறது.

- Advertisement -

கம்பீர் வந்ததின் நோக்கம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்ததிலிருந்து மூத்த வீரர்களை ஓரம் கட்டுவதற்கு முழுமையான முறையில் பயிற்சிகள் செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களை தேர்வு செய்யாமல் கைவிடவும் முடிவுகள் உள்ளுக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக மூத்த சாதனை வீரர்கள் தாங்களாகவே விலகிக் கொள்வது மரியாதை என விலகினார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இன்னும் டெஸ்ட் விளையாடுவதற்கான காலம் இருந்தாலும், அவர்கள் முன்கூட்டியே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

கம்பீர் இப்படி பேசக்கூடாது

இது குறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது ” இந்த முழுமையான மாற்றம் என்ற பேச்சுவார்த்தை குறித்து எனக்கு துளியும் விருப்பம் கிடையாது. இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு மாற்றம் தேவையும் கிடையாது. நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு வேண்டுமானால் மாற்றம் தேவையாக இருக்கலாம். இந்திய கிரிக்கெட்டில் திறமையுடன் பல வீரர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் புனிதத்தை காப்பாற்ற விரும்பிய ரோகித் மற்றும் விராட் கோலி, இப்படி உருவாக்கப்பட்ட சூழ்நிலையின் காரணமாக வெளியேறி விட்டார்கள்”

இதையும் படிங்க : சிஎஸ்கே பிளான் தெரிஞ்சதுமே.. ஜடேஜா என்கிட்ட இதைத்தான் சொன்னார் – ஆர்ஆர் உரிமையாளர் பேட்டி

“போட்டியில் தோல்வியடைந்த பிறகு கம்பீர் வீரர்களின் நுட்பம் குறித்து குறை சொல்ல முடியாது. ஒரு பயிற்சியாளராக உங்களுடைய வேலை குறை சொல்வது கிடையாது, நீங்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு சரியான தற்காப்பு ஆட்டம் இல்லை என்று தெரிந்தால் நீங்கள் ஏன் ஆட்டத்திற்கு முன்பாக அவர்களுக்கு கற்பிக்கவில்லை. கம்பீர் விளையாடும் பொழுது சுழல் பந்துவீச்சுக்கு எதிராக திறமையான பேட்ஸ்மேன் ஆக இருந்தார். எனவே அவர் இன்னும் வீரர்களுக்கு அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -