சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்கள் வீரரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு வர்த்தகம் செய்து கொண்டது.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ரவீந்திர ஜடேஜா வருகை குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராகத் திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ஐபிஎல் தொடக்க வருடத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், அதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம்பியன் வீரராக திகழ்ந்து வந்தார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் நலன் கருதி ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு எடுத்து ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு வர்த்தகம் செய்து கொண்டது. இந்த சூழ்நிலையில் இது குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான மனோஜ் பாடில் ஜடேஜாவை தங்கள் அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ரவீந்திர ஜடேஜா சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், சிறந்த பீல்டர்களில் ஒருவர். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் தொடக்கத்தில் எங்கள் அணிக்கு விளையாடி இருந்தாலும் உண்மையில் ஒரு நபராக நான் அவரை அறிந்ததில்லை. எனக்குத் தெரிந்து அப்போது அவர் ஒரு 19 வயது இளைஞன். தொடக்கத்தில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடிவிட்டு தற்போது அதே அணிக்கு மீண்டும் திரும்புவதில் நல்ல கதை உள்ளது என்பது தெளிவாகிறது.
இதையும் படிங்க:ஸ்பின்னை சமாளிக்க.. இந்திய வீரர்களுக்கு வித்தியாசமான பயிற்சி.. கம்பீர் செய்த புதிய ஏற்பாடு – சுவாரசிய தகவல்
இது ஒரு பெரிய கருப்பொருளாக இருந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வர்த்தகத்திற்கு தயாராக இருந்தபோது ஜடேஜா என்னை அழைத்து பேசினார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்ப விளையாட இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தி என்று கூறினார். தனிப்பட்ட முறையில் எந்த ஒரு உரிமையாளரும் ஜடேஜாவை வாங்கவே ஆர்வம் காட்டுவார்கள். அவரது கிரிக்கெட் பகுதிகளைப் பற்றி நான் பேசத் தேவையில்லை. அவர் ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் மற்றும் சர்வதேச கோப்பைகளையும் பெற்றுள்ளார். அவர் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர்” என்று பேசியிருக்கிறார்.






