யாராவது எனக்கு சொல்லுங்கப்பா.. தோனிய அதுக்கா சிஎஸ்கேவுல வச்சிருக்கிங்க? – மனோஜ் திவாரி விமர்சனம்

0
66
Dhoni

இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சிஎஸ்கே அணியில் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக மட்டுமே மகேந்திர சிங் தோனியை வைத்திருக்கிறார்களா? என மிகவும் காட்டமாக விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி அஸ்வினுக்கு அடுத்து ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது பெரிய சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக சொந்த அணி ரசிகர்களே தோனியை நோக்கி கேள்வி எழுப்பக்கூடிய ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

43 வயதில் இது தேவையா?

சிஎஸ்கே அணி நிர்வாகம் மைதானத்திற்கு ரசிகர்களை வரவழைக்கவும், டிக்கெட்டுகளை அதிக காசுக்கு விற்பனை செய்யவும், மேலும் தங்கள் அனைத்து ஸ்பான்ஸர்களை கொண்டு வருவதற்கும் தோனியை தொடர்ந்து வயதான காலத்தில் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக சிஎஸ்கே ரசிகர்களே இந்த போட்டிக்குப் பிறகு குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற்று விட வேண்டும் எனவும், இதுவே அவருடைய புகழுக்கு சரியானதாக இருக்கும் எனவும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரசிகர்கள் பேசுவது போலவே நேரடியாக மனோஜ் திவாரி சிஎஸ்கே நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பி இருப்பது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

தோனிக்கு அணியில் என்ன வேலை?

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “தோனி இந்த இடத்தில் பேட்டிங் வருவதால் என்ன பயன் இருக்கிறது? உண்மையில் அவர் கூட்டத்தை மட்டுமே மகிழ்விப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார் என்றால் அது என்னுடைய மூளைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கும். ஒருவர் ஆட்டம் இழக்காமல் பதினாறு பந்தில் 30 ரன்கள் எடுப்பார் என்றால், அவரை நீங்கள் ஏன் பேட்டிங் வரிசையில் மேலே அனுப்ப வில்லை? ஏன் நீங்கள் வெற்றி பெற முயற்சி செய்யவில்லை?”

இதையும் படிங்க : விராட் காலத்தை விட.. ரஜத் படிதார் டீம் 100 மடங்கு பெட்டரா இருக்கு.. காரணம் இதுதான் – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

“நீங்கள் வெற்றி பெற தான் விளையாடுகிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது எதற்காக அவர் இந்த இடத்தில் பேட்டரி செய்ய வர வேண்டும். தயவு செய்து எனக்கு யாராவது இதை புரிய வையுங்கள். அவர் 190 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். அவரை முன்பே அனுப்பி போட்டியில் வெற்றி பெறவாவது முயற்சி செய்யலாமே. எனது கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் யாராவது தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்+ என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -