கவாஸ்கர் முட்டாள்னு சொன்னது தப்பே இல்ல.. கோலியை பார்த்துமா திருந்தல ரிஷப் பண்ட் – மனோஜ் திவாரி விமர்சனம்

0
106
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னம் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என மனோஜ் திவாரி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 100 ரன்கள் தாண்டி மட்டுமே ரிஷப் பண்ட் எடுத்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பேட்டிங் நிலையான நம்பிக்கை அளிப்பதாக தெரியவில்லை. மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடிய வருகின்ற காரணத்தினால் ரிஷப் பண்ட் தப்பித்து வருகிறார்.

- Advertisement -

கவாஸ்கரின் கடுமையான கோபம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் டிரா செய்ய வேண்டிய போட்டியில் தேவையில்லாமல் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ரிஷப் பண்ட் விக்கெட் கொடுத்து வெளியேறினார். அந்த நேரத்தில் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் அவரை முட்டாள் என மிக கடுமையாக வெளிப்படையாக விமர்சனம் செய்தார். அந்த நேரத்தில் இவ்வளவு கடுமையான விமர்சனம் தேவையில்லை என சிலர் கூறினார்கள்.

இந்த நிலையில் தற்போதும் கூட ரிஷப் பண்ட் ஷார்ட் செலக்சனில் எந்த விதத்திலும் முன்னேறவில்லை. நேற்றைய போட்டியிலும் ஹசரங்கா பந்துவீச்சில் நேராக விளையாட எந்த முயற்சியும் செய்யாமல், ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடச் சென்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றம் தந்தார்.

- Advertisement -

விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்

இதுகுறித்து பேசி உள்ள மனோஜ் திவாரி கூறும் பொழுது “ரிஷப் பண்ட் திறமைசாலி தான். ஆனால் எடுத்தவுடன் அப்படியான ஒரு ஷாட் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. அவர் தொடர்ந்து இதையே செய்து வருகிறார். இதனால்தான் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது கவாஸ்கர் கோபமாக விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு இவ்வளவு திறமை இருந்தும் கூட அவர் நேராக பேட் செய்து ரன்கள் எடுப்பது இல்லை. இதுதான் கவாஸ்கரை கலக்கமடைய வைத்தது”

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணியில் பிளவா.. சாம்சனை ஒதுக்கும் டிராவிட்.. ரியான் பராக்கால் பிரச்சனை.. உண்மை என்ன?

“இந்த விஷயத்தில் ரிஷப் பண்ட் ஒருவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது விராட் கோலியைத்தான். விராட் கோலி பொதுவாக முதல் 10 பந்துகளில் ஆரம்பத்தில் ஏழு ரன்கள் எடுப்பார் இல்லையென்றால் ஐந்து ரன்கள் கூட எடுப்பார். ஆனால் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை எடுத்துச் சென்று விடுவார். ஒருநாள் கிரிக்கெட் என்று மட்டும் கிடையாது டி20 கிரிக்கெட் என்றாலும் அதிலும் 120 பந்துகள் இருக்கிறது. எனவே ரிஷப் பண்ட் விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -