இந்திய கிரிக்கெட்

அஸ்வினுக்கு செக் வைத்து வெளியே அனுப்புனது கம்பீர்தான்.. அங்க உண்மையா இதான் நடந்தது – மனோஜ் திவாரி பேச்சு

இந்திய கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதற்கு பயிற்சியாளர் கம்பீர் முக்கிய காரணமாக இருந்தார் என இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணி அடுத்தடுத்து உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்து வருகின்ற காரணத்தினால், இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அவரது அணுகுமுறைகள் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

கில்லை வைத்து பிளான்

இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் தனக்கென ஒரு இளம் அணியை உருவாக்கிக் கொள்ள விரும்பி, இளம் வீரர் கில்லை கேப்டனாக கொண்டு வந்து, மூத்த வீரர்கள் எல்லோரையும் வெளியில் தள்ளுவதை திட்டமாக வைத்திருந்தார் என விமர்சிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அவர் நினைத்த எல்லாவற்றையும் முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற்றது பரபரப்பான விஷயமாக மாறியது. பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட ரோஹித் சர்மாவும் விராட் கோலி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் சர்ச்சையாக மாறியது. இதற்குப் பின்னணியில் கம்பீர் நடவடிக்கைகள் தான் காரணம் என்று மனோஜ் திவாரி குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

அஸ்வினுக்கு நடந்தது இதுதான்

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது “கம்பீர் அணிக்கு வெளியே இருந்த வாஷிங்டன் சுந்தரை திடீரென உள்ளே அழைத்து வந்து, ரவிச்சந்திரன் அஸ்வினை பாதுகாப்பற்றவராக மாற்றினார். நீங்கள் இனி அஸ்வினை நம்பவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறி அது. என் கருத்துப்படி அஸ்வினுக்கு அது பெரிய வருத்தத்தை உருவாக்கியது. அதனால்தான் அவர் ஆஸ்திரேலியா தொடரில் பாதியிலேயே ஓய்வு பெற்றார்”

இதையும் படிங்க: விராட் ரோகித் இருந்தா மட்டும் ஜெயித்து இருக்க முடியாது.. கம்பீர் மேல குற்றம் சொல்லாதீங்க – கவாஸ்கர் ஆதரவு

“வெளிப்படையாக ரோகித் மற்றும் விராட் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களே வெளியில் செல்லும்படி நிலைமை உருவானது. அப்படியான நிலைமையை உருவாக்கியது கம்பீர். இந்த மாதிரியான அணி சூழ்நிலையில் எந்த வீரரும் விளையாட விரும்ப மாட்டார்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts