இந்திய டெஸ்ட் அணியில் கடைசியாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடிய பொழுதும் இந்திய அணி தோல்வி அடைந்தது என சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டி கம்பீருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் இரண்டு நட்சத்திர வீரர்களும் திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு பின்னால் கம்பீர் இருந்தார் என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது வரையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் இதை மறுத்து பேசியிருக்கிறார்.
இருவரின் கடைசி காலகட்டம்
அப்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் கடைசி இரண்டு தொடர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக மோசமாக இருந்தது. குறிப்பாக விராட் கோலிக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு ஆஸ்திரேலியா தொடர் மோசமாக அமைந்தது.
இதில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது இன்று வரையில் பெரிய பிரச்சினையாக அலசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரையும் இதனால் அணியை விட்டு விலக்க வேண்டும் என கம்பீர் முடிவு செய்ததாகவும், அதன் காரணமாகவே இருவரும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
உண்மை அது கிடையாது
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது ” உண்மையில் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்பது அவர்களுடைய முடிவாகவே இருந்திருக்க வேண்டும். அனேகமாக அவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்க சொல்லி இருக்கலாம். ஆனால் அவர்கள் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. நாங்கள் நியூசிலாந்து அணி இடம் தோற்ற பொழுதும் அவர்கள் அணியில்தான் இருந்தார்கள்”
இதையும் படிங்க : முன்னாடி எம்எஸ் தோனி கிட்ட பார்த்த அந்த விஷயத்தை.. இப்போ பவுமா கிட்ட பாக்குறேன் – ஏபி டிவில்லியர்ஸ்
“இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சென்று விளையாடிய பொழுது என்ன நடந்தது? அந்த தொடரிலும் இந்திய அணி மோசமாகவே தோல்வி அடைந்தது. எனவே நாம் இப்படி எல்லாம் சிந்திக்க கூடாது. அவர்களை யாரும் ஓய்வு பெற வேண்டும் என்று தள்ளவில்லை. நான் இந்த வழிகளில் இந்த விஷயத்தை யோசிக்க கூடாது” என்று கூறி இருக்கிறார்.






