ரோஹித்துக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்தும் திறமை இவரிடம் உண்டு – மனோஜ் திவாரி நம்பிக்கை

0
904
Rohit Sharma and Manoj Tiwary

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியை ஹர்திக் பாண்டியா தலைமை வருகிறார். அவரது தலைமையிலான குஜராத் அணி மிக சிறப்பாக செயல்படுவதாகவும், இந்திய அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வழிநடத்தும் திறமை அவருக்கு உண்டு என்று தற்பொழுது மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 228 ரன்கள் ஹர்திக் பாண்டியா குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அணையை மிகச் சிறப்பாக வழிநடத்தி ஐந்து போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் குஜராத் அணி கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறந்த அணி இல்லை என்பது போன்ற பேச்சு இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் அந்த அணி தற்பொழுது பலமிக்க அணியாக திகழ்கிறது. குறிப்பாக நேற்று பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நேற்றைய போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணி விளையாடும் வேகத்திற்கு முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று உறுதியாக சொல்லலாம்.

ஹர்திக் பாண்டியா தான் அதற்குப் பொருத்தமானவர்

கடந்த ஆண்டு இறுதியில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு இனி ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர் என அனைத்திலும் வெற்றி கண்டது. ரோஹித் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரை ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கிறது. அதேபோல அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இனி வருங்காலத்தில் இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக தகுதி மற்றும் திறமை தற்போது ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணையை அவர் வழி நடத்தும் விதம் மிக அற்புதமாக இருக்கிறது என்றும், ஒரு அணியை வழி நடத்துவதற்கு என்ன திறமை வேண்டுமோ அவை அத்தனையும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். எனவே வருங்காலத்தில் இந்திய அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்த ஹர்திக் பாண்டியா சிறந்த தேர்வாக இருப்பார் என்று மனோஜ் திவாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.