ஸ்ரேயாஸ் ஐயருக்கு நடந்தது அநியாயம்.. இதுக்கு மேலயும் அவருக்கு மரியாதை தரலைனா குற்றம் ஆயிடும் – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
16
Shreyas

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கியது அவரை பெரிய அளவில் பாதித்திருக்கிறது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் பேட்ஸ்மேன் ஆகவும் அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது புள்ளி பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடையாமல் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயரின் எதிர்காலம்

கடந்த ஆண்டுக்கு முன் ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டார். அந்த ஆண்டு அந்த அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் அந்த அணி நிர்வாகம் அவரை கழட்டிவிட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் தனது மாநில மும்பை அணிக்கு மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெள்ளைப் பந்து தொடர்களில் வெளிப்படுத்தினார். இந்திய ஒரு நாள் அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமான முறையில் செயல்பட்டார். இதற்கு முன்பாக இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் அபாரமாக விளையாடி இருந்தார். ஆனாலும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அவரை இது பாதித்திருக்கும்

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும்போது “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் விட்டது ஸ்ரேயாஸ் ஐயரை பாதித்திருக்கலாம். பிறகு அவர் மும்பை அணிக்கு அபாரமாக விளையாட ஆரம்பித்தார். இந்திய அணிக்கு இங்கிலாந்து தொடரிலும் சாம்பியன்ஸ் டிராஃபியிலும் அசத்தலாக இருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அசத்தினார். ஆனாலும் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க : விலகிய ஆயுஸ் மத்ரேவுக்கு பதிலா.. ஆர்சிபிகிட்ட இந்த வீரரை கேட்டு வாங்குங்க.. ரூல் இருக்கு யூஸ் பண்ணுங்க – அஸ்வின் அறிவுரை

“இத்தனை சிறப்பான செயல்பாட்டுக்கு பிறகு, பேட்டிங்கில் கீழ் வரிசையில் கடினமான பொறுப்பை ஏற்கக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது மிகப் பெரிய அநியாயம். மேலும் அவரை தொடராமல் விட்டவர்கள் மீது அவருக்கு கோபம் இருந்தால் அது நியாயமானதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -