விலகிய ஆயுஸ் மத்ரேவுக்கு பதிலா.. ஆர்சிபிகிட்ட இந்த வீரரை கேட்டு வாங்குங்க.. ரூல் இருக்கு யூஸ் பண்ணுங்க – அஸ்வின் அறிவுரை

0
21
Ashwin

தற்போது சிஎஸ்கே அணியில் நட்சத்திர இளம் வீரர் ஆயுஸ் மத்ரே காயம் காரணமாக விலகி இருக்கிறார். இவருடைய இடத்திற்கு லோன் முறையை பயன்படுத்தி ஆர்சிபி அணியில் இருந்து ஒரு வீரரை வாங்கும் படி அஸ்வின் கூறி இருக்கிறார்.

கடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஸ் மத்ரே தொடை பகுதியில் காயமடைந்தார். அவருக்கு அந்தப் பகுதியில் எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆறு முதல் 8 வாரங்கள் விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே அவர் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

லோன் முறை என்றால் என்ன?

ஐபிஎல் தொடரில் தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே பாதியில் ஒரு வீரரை இன்னொரு அணியில் இருந்து கடன் வாங்கும் முறைக்கு லோன் முறை என்று பெயர். இந்த வகையில் ஒரு வீரரை தற்காலிகமாக நாம் இன்னொரு அணியில் இருந்து வாங்கிக் கொள்ள முடியும்.

இது ஐபிஎல் தொடரில் 20 போட்டிகளில் இருந்து 32 போட்டிகள் நடந்து முடிவதற்குள்ளாக வாங்கிக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அந்த வீரர் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கக் கூடாது. அதேபோல அவர் எந்த அணியில் இருந்து வாங்கப்படுகிறாரோ அந்த அணிக்கு எதிராகவும் விளையாட கூடாது.

- Advertisement -

அஸ்வின் அறிவுரை

இந்த நிலையில் ஆர்சிபி அணியில் இருக்கும் இளம் வீரர் வியான் மல்கோத்ராவை சிஎஸ்கே வாங்கி காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். இந்த வீரர் இன்னும் ஒரு போட்டியில் கூட ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அக்சர் படேல் ஸ்டார் இந்திய வீரருக்கு செஞ்சது நியாயமே இல்லை.. தலைய சொரிய வச்சுட்டாரு – ஆரோன் பின்ச் விமர்சனம்

இதுகுறித்து அவர் பேசும் போது “தற்போது சிஎஸ்கே அணிக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஏழு போட்டிகளை விளையாடி முடித்தவுடன் லோன் முறையில் வீரர்களை வாங்க முடியாது. எனவே இப்போதே ஆர்சிபி அணியில் இருக்கும் வியான் மல்கோத்ராவை வாங்கி பயன்படுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம் முன் வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -