ஐபிஎல் 2024

4 சிக்ஸ் அடிக்கிறது பெரிய மேட்டர் கிடையாது.. எல்லாத்தை விட பெரிய சந்தோசம் இதுக்குதான் – ரஷித் கான் பேச்சு

இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வெற்றி பெற்று இருக்கிறது. ரஷித் கான் தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பான பினிஷிங் மூலம் குஜராத் அணிக்கு வெற்றி தேடி தந்திருக்கிறார்.

- Advertisement -

இன்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 36 பந்தில் 68 ரன்கள், ரியான் பராக் 48 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி 78 பந்துகளில் 13 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் பந்துவீச்சில் நான்கு ஓவர்களுக்கு 18 ரன் மட்டுமே தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

மேலும் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்த முறை கேப்டன் இல் மிகவும் புத்திசாலித்தனமாக பொறுமையாக விளையாடிய ஆட்டத்தை நகர்த்தி எடுத்துக் கொண்டு வந்தார். அவர் பதினாறாவது ஓவரில் 44 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த இடத்தில் குஜராத் அணி கொஞ்சம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 42 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நேரத்தில் ராகுல் திவாட்டியா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டம் இழந்தார். சமயம் கடைசி வரை களத்தில் இருந்த ரஷீத் கான் 11 பந்தில் 24 ரன்கள் எடுத்து, கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல வைத்தார். மேலும் அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ரஷீத் கான் கூறும் பொழுது “எனது பந்துவீச்சு மற்றும் எனது பேட்டிங் செயல்பாட்டை விட அணி வெற்றி பெற்றது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது. நான் பந்துவீச்சில் கொஞ்சம் சிரமங்களை சந்தித்து வந்தேன். எனக்கு நடுவில் பயிற்சி செய்வதற்கு ஒரு பெரிய செஷன் கிடைத்தது. இது எனது பந்துவீச்சை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவியது. இப்பொழுது நான் பழைய முறையில் பந்து வீசுவதாக உணர்கிறேன்.

இதையும் படிங்க : தோத்தது கஷ்டமா இல்ல.. ஆனா இந்த விஷயம்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு – சஞ்சு சாம்சன் பேச்சு

அதிக ரன் ரேட்டை துரத்தும் பொழுது மூன்று அல்லது நான்கு சிக்ஸர்கள் அடிப்பது ஒரு விஷயம்தான். அதை செய்து விட்டால் ரன் ரேட் தானாக குறைந்து விடும். நீங்கள் இந்த நேரத்தில் பாசிட்டிவாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பாசிட்டிவாக இருக்கிறீர்களோ அவ்வளவு சிறந்த செயல் திறன் வெளியில் வரும். நான் நல்ல முறையில் பந்து வீசியதாக உணர்ந்தது, என்னுடைய பேட்டிங்கிலும் எதிரொலித்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts