அடுத்த போட்டியிலாவது இவரை துவக்க வீரர் ஆக்குங்கள் – ஹர்பஜன் சிங் கருத்து

0
267

நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதுவரை உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்ததே கிடையாது என்ற சாதனையுடன் களம் கண்டது இந்திய அணி. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதன் காரணமாக பல ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். அதில் முக்கியமாக பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் ஏன் ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்று பலர் கூறினர். தற்போது இதே கேள்வியை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹர்பஜன்சிங் இஷான் கிஷனை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மிடில் ஆர்டரில் மும்பை அணியில் தடுமாறினாலும் டாப் ஆர்டரில் மிகவும் சிறப்பாக விளையாடினார் கிஷன். இவரது அதிரடி ஆட்டம் துவக்கத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்.

கேஎல் ராகுலிற்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் கிஷனை துவக்க வீரராக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மூன்றாவது வீரராக விராட் கோலியும் 4-வது வீரராக ராகுலும் களமிறங்கினால் இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 5 ஆவது வீரராக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்பொழுது ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்றாலும் கடைசி ஓவர்களில் அவரது பேட்டிங் திறமையை மட்டுமே அணியில் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் தான் அணியில் ஷர்துல் தாகூர் நிச்சயம் சேர்த்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். அணியின் கடைசி அவர்களை சந்திக்க ஹர்திக் பாண்டியா மற்றும் சார்பில் தாகூர் இருவரும் மிகவும் சரியாக இருப்பர் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். வரப்போகும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் கூறிய மாற்றங்கள் எதுவும் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.