“மகிபாய் சொன்னாரு.. ஆனா நான் எனக்கு தனியா ஒன்னு சொல்லிக்கிறேன்” – ரிங்கு சிங் பேச்சு!

0
670
Rinku

தற்பொழுது இந்திய டி20 அணிக்குள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வந்திருக்கின்ற காரணத்தினால், இளம் வீரர்களான திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது கடினமாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்த இரண்டு வீரர்களும் அணியில் இடம் பெற்றதோடு பிளேயிங் லெவனிலும் இன்று இடம் பெற்றார்கள்.

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணி பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் குளிர் அதிகமாக இருந்த நேரத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியை சிறப்பாக பந்துவீசி 158 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதற்கடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 40 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இவருடன் ஆரம்பத்தில் இணைந்து விளையாடிய திலக் வர்மா முக்கியமான 26 ரன்கள் எடுத்து ஒரு பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

- Advertisement -

கடைசியாக சிவம் துபே உடன் ஜோடி சேர்ந்த ரிங்கோ சிங் 9 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார். இளம் வீரர்கள் இந்திய டி20 அணிக்குள் வந்த பிறகு, ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் உருவாக்கும் தாக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது. பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக ரிங்கு சிங் அச்சமில்லாமல் விளையாடுவதோடு மிகவும் தெளிவாகவும், எந்தவித பதட்டமும் இல்லாமல் ஆட்ட சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட அசத்துகிறார்.

வெற்றிக்குப் பின் பேசிய ரிங்கு சிங் “நான் கடைசியில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். மேலும் நாட் அவுட் ஆக இருப்பதை பழக்கப்படுத்திக் கொண்டேன். குளிரில் பேட்டிங் செய்வது ரசிக்க முடிகிறது. ஆனால் பீல்டிங் செய்வது கடினமாக இருந்தது. பந்தை பிடிக்கும் பொழுது வலித்தது.

நான் எப்பொழுதும் என்னுடன் பேச முயற்சி செய்கிறேன். நான் ஆறாம் இடத்தில் பேட்டிங் செய்யும்பொழுது எதுவும் நடக்கலாம் என்று எனக்கு சொல்லிக் கொள்கிறேன்.

நான் மகிபாயிடம் பேசும் பொழுது அமைதியாக இருப்பது மிகவும் நல்லது என்று அவர் என்னிடம் கூறினார். பந்துவீச்சுக்கு தகுந்தவாறு நான் எதிர்வினை ஆற்றுகிறேன். மற்றபடி நான் எதுக்கு குறித்தும் அதிகம் யோசிப்பதே இல்லை. அப்படி யோசித்தால் அது எனக்கு தவறாக போய் முடியும். இதற்கு பதிலாக பந்துவீச்சாளர் என்ன செய்கிறார் என்று மட்டும் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!