சேப்பாக்கிற்கு அடுத்து இந்த மைதானம் பெஸ்ட்.. டி20 WCல் அன்பான வரவேற்பு கொடுத்தாங்க – எம்எஸ் தோனி நெகிழ்வு

0
72

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையோடு ஐபிஎல் 2025 தொடரை ஆரம்பித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்தியாவில் தனக்கு பிடித்த மைதானம் குறித்து சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

எம்எஸ் தோனிக்கு பிடித்த மைதானம்

மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரை சென்னை சேப்பாக்கம் மைதானம் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருவதால் சென்னை மக்கள் அவரை தமிழக வீரராகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். மேலும் ஐபிஎல் தொடரின் போது சேப்பாக்கம் மைதானத்தில் தோனி களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் அவரை வரவேற்க மக்கள் பெரும் விசில் சத்தத்தோடு ஆரவாரமாக தயாராகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் விசில் சத்தம் டெசிபிளில் பதிவு செய்யும் அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி தற்போது அளித்த பேட்டியில் சென்னை மைதானத்திற்கு அடுத்ததாக தனக்கு மும்பை மைதானம் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று என்று கூறியிருக்கிறார். அதாவது 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றதால் மும்பை மைதானத்தில் இந்திய அணிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது முக்கிய காரணம் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

என் இதயத்தில் முக்கிய இடம் உண்டு

இது குறித்து தோனி விரிவாக கூறும்போது “எனக்கு எப்போதுமே இரண்டாவது மைதான விருப்பம் என்று கிடையாது. ஏனென்றால் எங்களுக்கு கிட்டத்தட்ட எல்லாம் மைதானங்களிலும் ஒரே மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் மும்பை மைதானம் நான் ஒரு முக்கிய இடம் கொடுப்பேன். ஏனென்றால் 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் டி20 உலக கோப்பை வென்று விட்டு திரும்ப வரும்போது இங்கு நாங்கள் அன்பான வரவேற்பை பெற்றோம். 2011ஆம் ஆண்டு இறுதிப் போட்டியும் இங்குதான் நடந்தது. இதனால் மும்பை வான்கடே மைதானம் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல்-ல் இந்த விதி தேவையே இல்ல.. ஆனா ரன் நிறைய அடிக்கிறதுக்கு காரணம் வேற – தோனி பேச்சு

அதைத் தவிர நீங்கள் பெங்களூரில் விளையாடினாலும் கூட்டம் அற்புதமாக இருக்கும். அவர்கள் மிகவும் சத்தமாக இருக்கிறார்கள். இருப்பினும் அனைத்து சத்தமும் மைதானத்திற்குள் இருக்கும். மேலும் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானத்திலும் அதே அளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது இதில் யாரை தேர்ந்தெடுப்பது? அது மிகவும் கடினம் ஏனென்றால் அவர்கள் முழு மனதோடு வரவேற்க வருகிறார்கள். அவர்கள் அணிகளை ஆதரிக்கிறார்கள் அவர்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கிறார்கள்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -