ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கொண்டுவரப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து மகேந்திர சிங் தோனி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இம்பேக்ட் பிளேயர் விதியில் மூலமாக ஒரு இந்திய இளம் வீரர் கூடுதலாக விளையாடும் வாய்ப்பை பெறுகிறார் என்று நியாயப்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் கிரிக்கெட்டின் அடிப்படையை இந்த விதி சிதைப்பதாகவும், ஆல்ரவுண்டர்களுக்கான தேவையை அழிப்பதாகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இம்பேக்ட் பிளேயர் விதி செய்த மாற்றம்
இந்த விதியின் காரணமாக ஒவ்வொரு அணியிலும் பெரும்பாலும் கூடுதல் பேட்ஸ்மேன் இருக்க முடிகின்ற காரணத்தினால், எல்லா அணிகளும் அதிரடியான முறையில் விளையாட முடிவு செய்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 200 ரன்கள் என்ற அளவுக்கு ரன்கள் செல்கின்றன.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் செல்வதற்கு காரணம் இம்பேக்ட் பிளேயர் விதிதான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மகேந்திர சிங் டோனி இதை மறுத்திருக்கிறார். அதிக ரன்கள் செல்வதற்கான பல காரணங்கள் வெளியில் இருப்பதாகவும் தற்போது டி20 கிரிக்கெட் வடிவத்தில் பேட்டிங் அணுகுமுறை மிகவும் மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இம்பேக்ட் பிளேயர் விதி தேவையில்லை
இதுகுறித்து தோனி பேசும்போது “இந்த விதி அமல்படுத்தப்பட்ட பொழுது, உண்மையில் இந்த விதி தேவை இல்லை என்று நான் உணர்ந்தேன். அதே நேரத்தில் இந்த விதி எனக்கும் ஒரு வகையில் உதவி செய்கிறது. இருந்தபோதிலும் நான் இன்னும் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருக்கிறேன். நான் இம்பேக்ட் பிளேயராக வருவது கிடையாது. நான் விளையாட்டில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : விரலில் வெட்டுப்பட்ட அசுதோஷ் சர்மா.. போட்டிக்கு முன்ன நான் பேசினப்ப இதான் நடந்தது – ஹேமங்க் பதானி பேச்சு
“இந்த விதியின் காரணமாக நிறைய ரன்கள் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்குப் பின்னணியில் பனிப்பொழிவு மற்றும் அணியில் கூடுதல் பேட்ஸ்மேன்கள் இருப்பது போன்றவை காரணமாக இருக்கின்றன. இத்துடன் டி20 கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. பேட்டிங் அணுகுமுறை மாறி இருப்பதும் நிறைய ரன்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






