இந்திய கிரிக்கெட்

ரெய்னாவுடன் சேர்ந்து.. நான் இந்த விஷயத்தை மட்டும் செய்யவே மாட்டேன் – மகேந்திர சிங் தோனி பேட்டி

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி சுரேஷ் ரெய்னா குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி இவரது தலைமையில் இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை, டெஸ்ட் ஆரியணையில் நம்பர் ஒன், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை என இவரது தலைமையில் இந்திய அணி வென்ற கோப்பைகள் ஏராளம். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தோனி வளர்த்தெடுத்த வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் முக்கியமான வீரராக திகழ்ந்தார். கிரிக்கெட்டை தாண்டி பைக்குகளில் கவனம் செலுத்தும் மகேந்திர சிங் தோனி பைக் பயணத்தில் சுரேஷ் ரெய்னா உடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா குறித்து தோனி

இதுகுறித்து தோனி கூறும் போது “உங்களுக்கே தெரியும், ஒரு விஷயத்தை எளிதாக கூறுவதென்றால் மோட்டார் சைக்கிள் என்பது காரை போல் இல்லாமல் உங்கள் மீது தவறு இருந்தாலும் இல்லை என்றாலும் விபத்து ஏற்பட்டாலோ அல்லது கீழே விழுந்தாலோ நீங்கள் காயமடைவீர்கள். மேலும் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் தங்களது மூட்டுகள், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட்டை திட்டுங்க.. ஆனா இந்த விஷயத்துக்காக திட்டாதீங்க.. அவர் ஒரு பெஸ்ட் பிளேயர் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் பைக் சவாரிகளில் இருந்து விலகி இருப்பார்கள். ஆனால் என் உடன் அமர்ந்து சவாரி செய்தவர்களில் நான் விரும்பாத வீரர் குறித்து கூறினால் அதில் சுரேஸ் ரெய்னாவை கூறுவேன். ஏனென்றால் அவருடன் பைக் சவாரி செய்யும்போது நகரத் தொடங்குவார், சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஏதேனும் ஒரு டிரக்கை பார்த்தால் அதன் அருகாமையில் நெருங்கிச் சென்று, அதற்குப் பிறகு மேலும் முன்னோக்கி நகர தொடங்குவார்” என்று மகேந்திர சிங் தோனி கூறியிருக்கிறார். தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மீண்டும் களம் இறங்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts