தோனியா விராட் கோலியா?. எல்லா காலத்திலும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் – நியூஸி முன்னாள் வீரர் தேர்வு

0
29
Ms dhoni and Danny Morrison

இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரர்களுக்கு பஞ்சமே கிடையாது என்பது போல ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் கபில்தேவ், சச்சின், யுவராஜ் போன்ற வீரர்களுக்கு அடுத்தபடியாக தோனி மற்றும் விராட் கோலி குறிப்பிடலாம்.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் எல்லா காலத்திலும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் டோனியா? அல்லது விராட் கோலியா? என்ற கேள்விக்கு தனது விருப்பமான பதிலை தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு என்பது இந்திய கிரிக்கெட்டை ஒரு படி முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் இந்திய அணி அனைத்து ஐசிசி தொடர்களையும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. 1983ஆம் ஆண்டுக்கு பிறகு 2011ஆம் ஆண்டில் தோனி தலைமையில்தான் இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இந்திய கிரிக்கெட்டில் ஒரு புறம் தோனி முக்கிய வீரராக திகழ்ந்தால் மறுபுறம் விராட் கோலி அவருக்கு இணையான மற்றொரு வீரராக மதிப்பிடப்படுகிறார். ஆடுகளத்தில் தனது ஆக்ரோஷமான அணுகுமுறை, நவீன சிறந்த பேட்டிங் தொழில்நுட்பம், தற்போதைய கிரிக்கெட் வீரர்களின் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மகேந்திர சிங் தோனியை போலவே கோலிக்கும் உலகெங்கும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் எல்லா காலத்திலும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்ற கேள்விக்கு விராட் கோலி அல்லது மகேந்திர சிங் தோனியா என்று கேட்கப்பட்டபோது மோரிசன் மகேந்திர சிங் தோனியின் பெயரை தேர்வு செய்தார். அதற்கு விளக்கம் அளித்த மோரிசன் பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி என அனைத்து பேக்கேஜிலும் ஒரு வீரர் கிடைப்பது அரிதுஎன்று குறிப்பிடுகிறார்.

இது குறித்து அவர் கூறும் போது “இந்த கேள்விக்கு பதில் அளிப்பது கடினமான விஷயம். இருப்பினும் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மகேந்திர சிங் தோனியின் பெயரை குறிப்பிடுவேன். கேப்டன்சி, உத்வேகம், பினிஷர், வேகமான கீப்பிங் என்று அனைத்திலும் சிறந்தவராக இருக்கிறார். எனவே தோனிக்கு மாற்று வீரர் கிடைப்பது அரிது” என்று தோனியை தேர்வு செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க:39 ஓவர் 312 ரன்.. புரூக் லிவிங்ஸ்டன் அதிரடி.. ஆஸி சுருண்டு இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி

இருப்பினும் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன்ஷியில் இந்திய அணியை தொடர்ச்சியாக பல வருடங்கள் நம்பர் ஒன் அரியணையில் அமர வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன்களில் தோனிக்கு அடுத்ததாக விராட் கோலி இருந்திருக்கிறார்.

- Advertisement -