39 ஓவர் 312 ரன்.. புரூக் லிவிங்ஸ்டன் அதிரடி.. ஆஸி சுருண்டு இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி

0
689
Brook

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருக்க மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்ற நிலையில் இங்கிலாந்து களமிறங்கியது.

- Advertisement -

மிரட்டிய லியாம் லிவிங்ஸ்டன்

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் 39 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 62 பந்தில் 63 ரன்கள், கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக 58 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் வெறும் 27 பந்துகள் சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 62 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 39 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்தது. ஆடம் ஜாம்பா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி சரிவு

இதைத் தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மிட்சல் மார்ஸ் 34 பந்தில் 28 ரன்கள், ஹெட் 23 பந்தில் 34 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 68 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்மித் 5, ஜோஸ் இங்லீஷ் 8, லபுசேன் 4, மேக்ஸ்வெல் 2 என ஒற்றை இலக்க ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் ஆஸ்திரேலியா அணி 96 ரன்களுக்கு முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதற்கு அடுத்து 128 ரண்களில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : 171 ரன்.. 17 ஓவர்.. பட்டைய கிளப்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து அணியை வென்றது

கடைசி 58 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளை விட்டது. மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். இறுதியாக இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது 2-2 என நான்கு போட்டி முடிவில் சமநிலையில் இருக்கிறது.

- Advertisement -