“ஆசியக்கோப்பை இந்திய அணி வலிமையானது தான்” – ஜெயவர்த்தனே பளிச் பதில்!

0
677
Mahela Jayawardene

ஆகஸ்டு இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்கும் ஆசிய கோப்பை போட்டியை, செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பைக்கான ஒரு முன்னோட்டமாக எடுத்துக்கொள்ள இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. டி20 உலகக் கோப்பை போட்டியில் கலந்திருக்கும் ஒரு அணியை ஆசிய கோப்பை யிலேயே களமிறக்கி பரிசோதித்து பார்க்க நினைத்தது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்சல் படையில் இருவரது காயமும் மீண்டும் ஒரு முழுமையான இந்திய அணியை வடிவமைக்க முடியாது செய்துவிட்டது!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு கேஎல் ராகுலின் காயம், வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு என ஒரு முழுமையான இந்திய அணியை வைத்து இதுவரையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடாமல் இருந்து வந்தது. இந்த முறை ஆசிய கோப்பையில் இது சாத்தியமாகும் என்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் ஆசிய கோப்பையிலும் ஒரு முழுமையான இந்திய அணியை இந்திய அணி நிர்வாகத்தால் பல மறக்க முடியவில்லை!

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அஸ்வின், சாகல், ரவி பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்களும், புவனேஸ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் என 3 பாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு பாஸ்போர்ட் உலர் பற்றாக்குறை இருக்கிறது. இந்த இடத்திற்கு முகமது ஷமியை தேர்வு செய்திருக்கலாம் என்றும் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உலக கிரிக்கெட்டின் பிளேயரும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமான மஹேல ஜெயவர்தன ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இவர் அறிவிக்கப்பட்டுள்ள அணியை வலிமையான அணியே என்று நம்புகிறார்.

ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியைப் பற்றி மஹேல ஜெயவர்த்தன கூறும்பொழுது ” கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர். அவர் ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு சிறிதுகாலம் சர்வதேச கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருக்கிறார். நடுவில் அவர் ஏதாவது சர்வதேச போட்டிகள் விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது அவருக்கும் தேசிய அணிக்காக விளையாடுவதற்கும் மிகவும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி முடியாமல் போய்விட்டது. தற்போது அவர் அணிக்கு திரும்பி இருப்பது நல்ல விஷயமே” என்று தெரிவித்தார்!

- Advertisement -

மேலும் அவர் விராட்கோலி பற்றி பேசும் பொழுது ” விராட் கோலியின் தற்போதைய நிலை மிகவும் துரதிஷ்டவசமானது. ஆனால் இந்த நிலையில் இருந்து அவரால் மீண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன். அவர் இந்த மாதிரி சூழ்நிலைகளில் ஏற்கனவே இருந்திருக்கிறார். அதிலிருந்து மிகச்சிறப்பாக வெளியே வந்திருக்கிறார். ஒரு வீரரின் கிளாஸ் என்பது தான் நிரந்தரம் பார்ம் என்பது தற்காலிகமானது தான்” என்று தெரிவித்தார்!