“பட்லருக்கு மேஜிக் டெலிவரி.. என் ஊர் கிரவுண்ட்.. எப்ப என்ன பண்ணும் அப்படினு எனக்கு தெரியாதா?!” – குல்தீப் யாதவ் கொடுத்த அசத்தல் பேட்டி!

0
10227
Kuldeep

நேற்று இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக முதலில் டாஸ் தோற்று பேட்டிங் செய்த இந்திய அணி 229 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனால் 270 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணியை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 129 ரன்களுக்கு சுருட்டி, நூறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தனர்.

இந்திய பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்ற, சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதில் இரண்டு விக்கெட்டுகளை குல்திப் யாதவ் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு குல்தீப் யாதவ் வீசிய ஒரு மேஜிக் டெலிவரி கிளீன் போல்ட் ஆக்கியது. இந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த சுழல் பந்தாக அது இருக்கலாம். மேலும் இந்த லக்னோ மைதானம் அவருடைய சொந்த மைதானம் ஆகும்.

- Advertisement -

போட்டிக்கு பிறகு பேசி உள்ள அவர் கூறும் பொழுது “இங்கு முதலில் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும். நாங்கள் இன்னும் ஒரு முப்பது ரன்கள் சேர்த்து எடுத்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும். நாங்கள் பவர் பிளேவில் இரண்டு விக்கெட் எடுத்தால் ஆட்டத்தில் இருப்போம் என்று நினைத்தேன்.

ஆனால் பவர் பிளேவில் பும்ரா மற்றும் சமி இருவரும் ஆளுக்கு இரண்டு விக்கெட் எடுத்து அசத்தி விட்டார்கள். இந்த இடத்திலிருந்து நாங்கள் ஆட்டத்திற்குள் உடனே வந்து விட்டோம்.

எனக்கு என் சொந்த ஊர் மைதானத்தையும் அதன் சூழ்நிலைகளையும் மிக நன்றாக தெரியும். இங்கு பந்து நன்றாக சுழல செய்யும். அதற்கு சரியான நீளத்தில் வீச வேண்டும். நான் கூட கிரிசையும் பயன்படுத்தி வீசினேன்.

100% இது நல்ல ஆடுகளம். திறமை இருந்தால் 50 ஓவர்கள் இங்கு விளையாட முடியும். இங்கு இரவில் பந்து வீசும் பொழுது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். உங்களிடம் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தால் நீங்கள் எப்போதும் ஆட்டத்தில் இருப்பீர்கள்.

நான் எனது பேட்டிங்கில் தற்பொழுது கடுமையாக உழைத்து வருகிறேன். நான் கடைசியில் எடுக்கும் 10 முதல் 15 ரன்கள் அணிக்கு உதவியாக இருக்கிறது. இன்று கூட நாங்கள் கொண்டு வந்த 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. நான் போட்டியில் மட்டும் பேட்டிங் செய்வது கிடையாது பயிற்சியிலும் செய்து வருகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!