டிஎன்பிஎல்-ல் அஸ்வின் கெமிக்கல வச்சி மோசமான அந்த தப்ப பண்றாரு.. மதுரை அணி குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

0
150
Ashwin

தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் டி20 தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் கெமிக்கல் வைத்து பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி குற்றச்சாட்டை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக ஜூன் 14ஆம் தேதி விளையாடிய போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகத்தின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மதுரை பாந்தர்ஸ் குற்றச்சாட்டு

இந்த இரு அணிகளுக்கும் இடையே ஜூன் 14ஆம் தேதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் தந்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் மதுரை பாந்தர்ஸ் அணியை 150 ரன்னில் கட்டுப்படுத்தி, பிறகு 13 ஓவரில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றார்கள். இந்த போட்டியில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மதுரை பாந்தர்ஸ் நிர்வாக இயக்குனர் பூஜா டிஎன்பிஎல் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில் “திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான எங்களுடைய சமீபத்திய போட்டி என்பது பந்தை சேதப்படுத்திய விவகாரம் நடந்தது. போட்டியின் நடுவே பலமுறை எச்சரிக்கை இருந்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் கெமிக்கல் தடவியதாக சந்தேகிக்கப்படும் துண்டுகளைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது. பீல்டர்கள் மற்றும் பவுலர்கள் பந்தை எவ்வாறு சேதப்படுத்தினார்கள் என்பது குறித்தான ஆதாரத்தை எங்கள் தொழில்நுட்பக் குழு திரட்டி வருகிறது. எங்கள் கண்டுபிடிப்பு குறித்தான விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

டிஎன்பிஎல் நிர்வாகம் தந்த விளக்கம்

டிஎன்பிஎல் தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்னா கண்ணன் இது குறித்து கூறும் பொழுது ” இது குறித்து எங்களுக்கு புகார் வந்திருப்பது உண்மை. போட்டி முடிந்து 12 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் என்பது விதி என்றாலும் கூட இந்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. நாங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். இதில் உண்மை இருந்தால் இதை விசாரிக்க ஒரு குழுவை அமைப்போம். யார் மீதும் ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு வைப்பது தவறு. ஒருவேளை ஆதாரம் இல்லை என்றால் மதுரை அணி தடையை சந்திக்க நேரிடும்”

இதையும் படிங்க : சிராஜ்க்கான நேரம் வந்துவிட்டது.. பொறுப்பை எடுத்து கொள்ள வேண்டும்.. பயிற்சி ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ்க்கு பாரத் அருண் அறிவுரை

“நாங்கள் கொடுக்கும் துண்டுகளை பயன்படுத்தி மட்டுமே பந்தை துடைக்க வேண்டும். ஒவ்வொரு ஓவருக்குப் பிறகும், சிக்ஸர் அடித்தாலும், விக்கெட் விழுந்தாலும் பந்தை வாங்கி நடுவர்கள் சரி பார்ப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியின் போது பந்தில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -