சிராஜ்க்கான நேரம் வந்துவிட்டது.. பொறுப்பை எடுத்து கொள்ள வேண்டும்.. பயிற்சி ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ்க்கு பாரத் அருண் அறிவுரை

0
64

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் ,இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலின் முன்னணி வீரராக பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாகவும், ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் இருந்த காலத்தில், சிராஜ் தனது ஆரம்ப ஆண்டுகளில் அருணின் வழிகாட்டுதலின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

சிராஜின் பந்துவீச்சு வளர்ச்சியை அருண் நெருக்கமாக பார்த்தவர், 31 வயதான சிராஜ், புதிய பந்துகளை அபாரமாக பயன்படுத்திவிக்கெட்டுகளை எடுப்பார்.
பார்டர் -கவாஸ்கர் தொடரின்போது முதுகு காயம் அடைந்த ஜஸ்பிரீத் பும்ரா, தற்போது இங்கிலாந்து தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது.

- Advertisement -

சிராஜ்க்கு நல்ல வாய்ப்பு:

இதன் காரணமாக அணி நிர்வாகம் அவரது பணிச்சுமையை கவனமாக நிர்வகிக்க உள்ளது. பும்ராவின் இடத்தை சிராஜ் நிரப்ப முடிந்தால், சுப்மன் கில்லின் தலைமையிலான அணிக்கு இது நல்ல பலனைத் தரும்.
இங்கிலாந்து பயணம் சிராஜுக்கு தனது அந்தஸ்தை உயர்த்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவதாக அருண் கூறினார்.

2021ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற வெற்றியின்போது, சிராஜ் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்து நின்றதை அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசிய அவர், “சிராஜுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவருக்கு போதுமான அனுபவம் உள்ளது.”

- Advertisement -

சிராஜ்க்கான நேரம் வந்துவிட்டது:

“அவர் சில அசாதாரணமான பந்துவீச்சு ஸ்பெல்களை வீசியிருக்கிறார். குறிப்பாக கடந்த முறை நாம் வென்ற லார்ட்ஸ் டெஸ்டில் அவர் வீசியது போல. இப்போது சிராஜ் எழுந்து நின்று , ‘நான் நமது நாட்டின் முன்னணி பந்து வீச்சாளனாக இருப்பேன்’ என்று கூற வேண்டிய நேரம் இது. அவருக்கு தேவையான திறமை உள்ளது. இப்போது அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அவர் மிகவும் புத்திசாலி.”

இதையும் படிங்க: ஐசிசி 50 ஓவர் மகளிர் உலககோப்பை அட்டவணை முழு விவரம்.. இந்தியா, பாகிஸ்தான் போட்டி எங்கு, எப்போது?

“சிராஜ் போன்ற பவுலர், ஒரு கேப்டனுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியவர், தனது முழு திறனையும் வெளிப்படுத்துபவர். ஆக்ரோஷமாக இருப்பது நல்லது. ஆனால் அதை கட்டுப்படுத்துவது முக்கியமாக இருக்கும். அவர் ஐபிஎல்லில் நல்ல பார்மில் இருந்தார். அவரது ரிதம் நன்றாக இருந்தது,” என்று பரத் அருண் கூறினார்.சிராஜ் இந்திய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள், 44 ஒருநாள் போட்டிகளில் 71 விக்கெட்டுகள், மற்றும் 16 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -