டி20 உலகக் கோப்பைக்கு அவரை எடுக்காவிட்டால் நீங்கள் முடிந்தீர்கள் – இந்திய தேர்வாளர்களை விளாசிய முன்னாள் வீரர்!

0
132
T20 wc 2022

விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நகர்ந்த பிறகு இந்திய அணி ரோகித்சர்மா தலைமையிலும் ராகுல் டிராவிட் வழிகாட்டலிலும் ஒரு தொலைநோக்காளர் திட்டத்தோடு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது!

இந்த வகையில் இந்திய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பெரிதாக குறைசொல்ல ஒன்றுமே கிடையாது. ஆனால் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் நிச்சயம் அது விவாதத்துக்கு உரிய ஒன்றாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

காரணம் என்னவென்றால், மொத்தம் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் ஒரு அணி செல்வது சரியானதாக இருக்காது. தற்போதைய இந்திய ஆசிய கோப்பை அணி அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அப்படிப்பட்ட ஒரு அணியில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி தேர்வு செய்யப்படாதது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரது செயல்பாடுகள் சுமாராகத்தான் இருந்தது. இந்த வகையில் எடுத்து பார்த்தால் ஒட்டு மொத்த இந்திய அணியின் செயல்பாடு மே மிகச் சுமாராகத்தான் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்கிய முகமது சமி தனது அற்புதமான சீம் பவுலிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார். மொத்தம் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவருடைய எக்கானமி 8. இப்படி இருந்தும் கடந்த ஒரு வருடமாக அவரை இந்தியா டி20 அணியில் தேர்வு செய்யவில்லை.

ஆசிய கோப்பை துவங்கி அதில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது பின்னும் முகமது சமய தேர்வு செய்யாதது இன்றுவரை விமர்சனம் ஆகவே இருந்து வருகிறது. தற்போது 1983ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் இந்திய அணியில் வீரரான மதன்லால் இதுகுறித்து தனது பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறும் பொழுது ” முகமது சமி நிச்சயமாக டி20 உலக கோப்பையில் இருக்க வேண்டும். பும்ராவுக்கு பிறகு அவர் தான் இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளர். எனக்கு விக்கெட்டுகளை பெற்றுக்கொடுக்க நான் ஒரு பந்து வீச்சாளரை தேடுவேன். எனக்கு வெறும் ரன்களை மட்டுமே கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. இந்த டி20 வடிவத்தில் எல்லா பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கத்தான் வருவார்கள். இங்கு தன்னை கட்டுப் படுத்த ஒரே வழி விக்கெட் எடுப்பது தான். அதற்கு முகமது சமி போன்ற விக்கெட் டேக்கர்கள் வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ” டி20 உலக கோப்பையில் முகமது சமய இந்திய தேர்வாளர்கள் தேர்வு செய்யாவிட்டால் அவர்கள் மிகப்பெரிய தவறை செய்ததாக ஆகும். அவர் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரை ஏன் இந்திய டி20 அணியில் எடுக்கவில்லை என்று எனக்கு புரியவே இல்லை. இப்போதுள்ள பந்துவீச்சாளர்களை விட அவர் சிறந்த பந்துவீச்சாளர் இல்லையா? உலக வேகப் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் ” என்று தன் கருத்தை பகிர்ந்திருக்கிறார்!