பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவை மிக மோசமான முறையில் விமர்சனம் செய்திருந்தால். இது குறித்து இந்திய முன்னாள் வீரர் மதன் லால் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது தற்போது ஆசியக் கோப்பை தொடரில் மிகப்பெரிய சர்ச்சையான சம்பவமாக மாறி இருக்கிறது. இது தொடர்பாக இரு பக்கங்களில் இருந்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்திய வீரர்கள் கைகுலுக்காததை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் வேண்டுமென்றே சூரியகுமார் யாதவ் பெயரை சுவார்குமார் என்று பலமுறை குறிப்பிட்டு பேசினார். நிகழ்ச்சியின் நெறியாளர் திருத்தி சொன்னபோதும் கூட அவர் இதை மாற்றிக் கொள்ளவில்லை.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சுவார் என்றால் இந்தியில் பன்றி என அர்த்தம் வருகிறது. சூரியகுமார் யாதவை பன்றி என சொல்வதற்காக வேண்டுமென்றே செய்தது அப்பட்டமாக தெரியவந்தது. இதன் காரணமாக முகமது யூசுப் மீது பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த மதன்லால் முகமது யூசுப் தேவையற்ற முறையில் பேசி பதட்டத்தை அதிகரித்து வருவதாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஏற்கனவே செட் பண்ணிட்டோம்.. பாகிஸ்தான் அணியை வீட்டுக்கு அனுப்புவோம் – யுஏஇ கோச் பேட்டி
இதுகுறித்து மதன் லால் பேசும்பொழுது “ஓ பாருங்கள் இது தான் பாகிஸ்தான் குணாதிசயம். யாரையும் எப்படி இப்படி மோசமான முறையில் பேச முடியும்? இவை மட்டுமே அவர்களுக்கு தெரியும் வேறு எதுவும் தெரியாது. இதற்கு மேல் என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது. இப்படி பேசுவது மிகவும் முட்டாள்தனமானது. அதுவும் முன்னாள் கிரிக்கெட் வீரரிடம் இருந்து வந்தது முழு முட்டாள்தனம்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.